பொதுவாக அனைவருக்கும் 7 முதல் 8 மணி நேரம் உறக்கம் என்பது அவசியம். தூங்கும் போது தான் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். உடலில் உள்ள உறுப்புகளுக்கும் ஓய்வு கிடைக்கும். எனவே இடது புறம் திரும்பி படுக்க வேண்டும் என கூறுகிறார்கள். கவிழ்ந்து படுப்பதனால் பல பிரச்சினைகள் உண்டாவதால் அதனை தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. அதாவது கவிழ்ந்து படுப்பதனால் முதுகு எலும்புக்கான ஆதரவு குறைந்து, அது நாளடைவில் முதுகு வலி, கீல்வாதம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
கவிழ்ந்து படுப்பதால் நாசி குழாய் சுருங்கும். கழுத்து ஒற்றை பக்கமாக திரும்பி இருப்பதனால் தசை வலி ஏற்படும். மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். அதுமட்டுமில்லாமல் சிறுநீரகம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.
ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் குப்புற கவிழ்ந்து படுத்தால் மூச்சு திணறல் அதிகரிக்கும்.
குப்புற படுப்பதால் வயிறு உப்புசம், செரிமான கோளாறு போன்றவை ஏற்படும். ஏனென்றால் வயிற்றில் அதிக அழுத்தம் இருப்பதன் காரணமாக உணவு செரிமானமடைவதில் சிக்கல் ஏற்பட்டு அஜீரணம், அமில கோளாறு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இது தவிர குப்புற படுப்பதால் முகத்தில் அழுத்தம் உண்டாகி ரத்த ஓட்டம் குறைவதால் தோலில் பாதிப்பு ஏற்படும்.
குப்புற படுப்பதால் சில பகுதிகளில் அழுத்தம் ஏற்பட்டு ரத்த ஓட்டம் சீராக நடைபெறாமல் கை – கால் உறைதல், தசைவலி மற்றும் நரம்பு அழுத்தத்தை ஏற்படுத்தும். அடுத்தது இதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டமும் தடைபடும். இதனால் இதயத்துடிப்பு மாறுபடும்.
குப்புற படுத்தால் சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டு சிறுநீர் வெளியேறும் அளவு குறையும்.
ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் இதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் குப்புற படுப்பதனால் பிரசவத்தில் சிக்கல் ஏற்படும். குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் முறையாக செல்லாது. எனவே பக்கவாட்டில் திரும்பிப் படுக்க வேண்டும். முதுகை தரையில் ஒட்டியபடி படுத்து தூங்குவது முதுகு வலியை ஏற்படுத்தாது. கவிழ்ந்து தூங்குவது உடல் நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.