spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஜலதோஷத்திற்கு தீர்வு தரும் பால்.... எப்படின்னு தெரியுமா?

ஜலதோஷத்திற்கு தீர்வு தரும் பால்…. எப்படின்னு தெரியுமா?

-

- Advertisement -

பால் என்பது ஜலதோஷத்திற்கு தீர்வு தருவதாக சொல்லப்படுகிறது.ஜலதோஷத்திற்கு தீர்வு தரும் பால்.... எப்படின்னு தெரியுமா?

பொதுவாக பால் மட்டும் குடித்தால் அது சளியை அதிகரிக்கும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் இதில் உள்ள இயற்கை மூலிகைகள் சளி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை கரகரப்பு போன்றவற்றை சரி செய்யும். அந்த வகையில் சூடான பாலுடன் தேன் கலந்து குடித்து வர சளி, இருமலுக்கு நிவாரணம் கிடைக்கும்.ஜலதோஷத்திற்கு தீர்வு தரும் பால்.... எப்படின்னு தெரியுமா? ஏனென்றால் பாலில் தேன் சேர்க்கும் போது அதில் ஆன்ட்டி பாக்டீரியா உருவாகி சளியில் இருந்து விடுபட உதவும். இது தவிர ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் அளவு இசப்கோல் சேர்த்து குடித்து வர அஜீரண கோளாறு பிரச்சனையை தடுக்கலாம். இது அசிடிட்டிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.ஜலதோஷத்திற்கு தீர்வு தரும் பால்.... எப்படின்னு தெரியுமா?

we-r-hiring

பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால் தொண்டை வலி குறையும். அதேபோல் பாலில் இஞ்சி சேர்த்து குடித்தால் சளியை கரைக்கும். பாலில் மிளகு சேர்த்து பருகினால் மூச்சுக்குழாய் திறக்க உதவும். பாலில் ஏலக்காய் சேர்த்து குடித்தால் அதில் உள்ள வாசனை செரிமானத்திற்கு நன்மை பயக்கும்.ஜலதோஷத்திற்கு தீர்வு தரும் பால்.... எப்படின்னு தெரியுமா?

இது தவிர ஒரு கப் பாலில் சிறிய அளவு இஞ்சி, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி மிளகுத்தூள், இரண்டு முதல் மூன்று துளசி இலை ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு இதனை வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து வெதுவெதுப்பான சூட்டில் பருகும் போது தொண்டை வலி, சளி தொல்லை ஆகியவை குணமடைவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ