தமிழ் மரபு மருத்துவத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட வரும் மூலிகை தான் முடக்கத்தான். முட்டி முடக்கி விட்டதால் தான் இதற்கு முடக்கத்தான் என்று பெயர் வந்தது. முடக்கத்தான் என்பது வாதம் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாகும் நரம்பு சம்பந்தப்பட்ட வலிகளை குறைக்க இந்த முடக்கத்தான் உதவும்.
மேலும் முடக்கத்தான் சாறு செரிமானத்தை சீராக்கி செரிமான பிரச்சனைகளை சரி செய்யும். அடுத்தது முடக்கத்தான் எண்ணெய் முடி உதிர்வு, பொடுகு தொல்லை போன்ற பிரச்சினைகளை சரி செய்யும்.
இந்த முடக்கத்தான் இலைகளை அரைத்து தோசை மாவில் கலந்து தோசை சுட்டு சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
முடக்கத்தான் இலை, மிளகு, துளசி ஆகியவற்றை சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். காலை வெறும் வயிற்றில் இதை குடித்து வந்தால் உடல் வெப்பம் தணியும். அத்துடன் மூட்டு வலி, வாதம் போன்ற பிரச்சனைகளும் குணமாகும்.
முடக்கத்தான் இலைகளை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி அந்த எண்ணையை மூட்டுகளில் வலி இருக்கும் பகுதிகளில் தேய்த்து வர விரைவில் பலன் கிடைக்கும். மேலும் இந்த முடக்கத்தான் இலைகளை வெயிலில் காயவைத்து பொடி செய்து அதனை கசாயமாகவும் தயார் செய்து குடிக்கலாம். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. கர்ப்பிணி பெண்களும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் முடக்கத்தான் இலைகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.