- Advertisement -
பளபளப்பான மற்றும் வலுவான கூந்தலைப் பெற நீங்கள் வீட்டிலேயே செய்து பார்க்கக்கூடிய ஐந்து எளிய மற்றும் சக்திவாய்ந்த இயற்கை வைத்தியங்களை இங்கே காணலாம்.
1. நெல்லி எண்ணெய்

- செய்முறை:
- ஒரு கிண்ணத்தில் 2-3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி (அ) நற்பதமான நெல்லிக்காயை எடுத்துக்கொள்ளவும்.
- அதனுடன் 1 கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து, குறைவான தீயில் 8-10 நிமிடம் சூடேற்றி இறக்கி, குளிர வைக்கவும்.
- பயன்பாடு:
- எண்ணெய் குளிர்ந்ததும், அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 5-7 நிமிடம் மசாஜ் செய்யவும்.
- 2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசவும்.
- பலன் & கால அளவு:
- வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், தலைமுடி வலுவடைவதோடு, பளபளவென்றும் இருக்கும்.
2. வெந்தய மாஸ்க்


- செய்முறை:
- 2 டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை நீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- மறுநாள் காலையில் அந்த விதைகளை அரைத்து, அத்துடன் 2-3 டேபிள் ஸ்பூன் தயிர் அல்லது கற்றாழை ஜெல்லை சேர்த்து கலக்கவும்.
- பயன்பாடு:
- தயார் செய்த மாஸ்க்கை தலையில் தடவி 30-45 நிமிடம் ஊற வைக்கவும்.
- அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசவும்.
- பலன் & கால அளவு:
- வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வர, தலைமுடி உடைவது குறையும்.
3. தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் மசாஜ்

- செய்முறை:
- நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை 1:1 என்ற விகிதத்தில் எடுத்து கலந்து கொள்ளவும்.
- பயன்பாடு:
- கலந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைக்கவும்.
- பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசவும்.
- பலன் & கால அளவு:
- வாரத்திற்கு 2 முறை செய்து வர, தலைமுடியில் ஏற்படும் சேதங்கள் தடுக்கப்படும்.
4. வெங்காய சாறு

- செய்முறை:
- 1 சின்ன வெங்காயத்தை எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பயன்பாடு:
- அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.
- பலன் & கால அளவு:
- வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தி வர, தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
- குறிப்பு: இந்த வழியை முயற்சிக்கும் முன், பேட்ச் டெஸ்ட் செய்து பார்ப்பது முக்கியம்.
5. கற்றாழை ஜெல் மாஸ்க்

- செய்முறை:
- நற்பதமான கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளவும்.
- உங்களுக்கு சென்சிடிவ் ஸ்கால்ப் இருந்தால், கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பயன்படுத்த வேண்டும்.
- பயன்பாடு:
- மாஸ்க்கை ஸ்கால்ப்பில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைக்கவும்.
- பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசவும்.
- பலன் & கால அளவு:
- வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தி வந்தால், முடி ஆரோக்கியம் மேம்படுவதைக் காணலாம்.
பொடுகு தொல்லைக்கு தீர்வு வேண்டுமா?…. இதோ உங்களுக்காக சில டிப்ஸ்!



