spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பொடுகு தொல்லைக்கு தீர்வு வேண்டுமா?.... இதோ உங்களுக்காக சில டிப்ஸ்!

பொடுகு தொல்லைக்கு தீர்வு வேண்டுமா?…. இதோ உங்களுக்காக சில டிப்ஸ்!

-

- Advertisement -

பொடுகு தொல்லைக்கு தீர்வு தரும் சில எளிய வழிகள் பற்றி பார்க்கலாம்.பொடுகு தொல்லைக்கு தீர்வு வேண்டுமா?.... இதோ உங்களுக்காக சில டிப்ஸ்!

பொடுகு தொல்லை என்பது தலையில் அழுக்கு சேர்வதாலும், தலையில் இருக்கும் ஈரப்பதம் குறைவதாலும் ஏற்படக்கூடும். இந்த பிரச்சனை ஆண் – பெண் இருபாலருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கிறது. எனவே பொடுகு தொல்லையை கட்டுப்படுத்த சில மாஸ்க் – களை பயன்படுத்தலாம்.

we-r-hiring

1. முதலில் ஒரு பாத்திரத்தில் அரை கப் அளவு தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை தலையில் தேய்த்து மசாஜ் செய்து 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.பொடுகு தொல்லைக்கு தீர்வு வேண்டுமா?.... இதோ உங்களுக்காக சில டிப்ஸ்! 2. அடுத்தது ஒரு கப் கிரீன் டீ, இரண்டு முதல் மூன்று துளிகள் புதினா எண்ணெய், ஒரு ஸ்பூன் வெள்ளை வினிகர் ஆகியவற்றை சேர்த்து கலந்து அதனை தலையில் தேய்த்து காய வைத்து, பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி கழுவ வேண்டும்.
3. ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அத்துடன் 10 முதல் 12 செம்பருத்தி இலைகளையும், அரை கப் அளவு தயிரையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை தலையில் மண்டை ஓட்டில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
4. நன்கு கனிந்த 2 வாழைப்பழங்களை எடுத்து அதனை மசித்து, ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதை அப்படியே தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின்னர் குளிக்க வேண்டும்.பொடுகு தொல்லைக்கு தீர்வு வேண்டுமா?.... இதோ உங்களுக்காக சில டிப்ஸ்! 5. ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். அத்துடன் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு கப் தயிர், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச நல்ல தீர்வு கிடைக்கும்.
இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ