ஓமவள்ளி சாதாரண நிலத்தில் கூட வளரக்கூடியது. இவை கட்டாயம் வீட்டில் வளர்க்கக்கூடிய மூலிகை வகையாகும். ஏனெனில் இவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு ஓமவள்ளி நல்ல தீர்வாக பயன்படுகிறது. ஓமவள்ளி இலை மற்றும் காம்பினை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு கசாயம் செய்து குடித்து வந்தால் இருமல், சளி, காய்ச்சல் போன்றவை குணமடையும்.

ஓமவள்ளி இலையின் சாறு எடுத்து அதில் நல்லெண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை கலந்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தீராத தலைவலியும் குணமாகும்.
ஓமவள்ளி இலைகளின் சாறு எடுத்து அதனை சாப்பிட்டு வர செரிமான கோளாறுகள் குணமடைந்து ஜீரண சக்தி அதிகரிக்கும்.
ஓமவள்ளி இலைகள் மூன்றினை எடுத்து காலை வேளையில் மென்று சாப்பிட்டு, அதைத் தொடர்ந்து பின் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் மார்பு வலி குறையும்.
மேலும் இவை நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும், வாயு, வாதம் போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது .
ஓமவள்ளி இலைகளை கீரையாக செய்தும் சாப்பிடலாம். அதேசமயம் கடலை மாவில் திரட்டி பஜ்ஜி போன்றும் செய்து சாப்பிடலாம்.
இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.