பப்பாளி என்பது ஆரோக்கியமான பழ வகையாகும். இது செரிமானத்தை மேம்படுத்தி கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதாவது கல்லீரல் வீக்கம் ஏற்பட்டிருக்கும் போது பப்பாளி ஒரு இயற்கை நிவாரணியாக பயன்படுகிறது.
மதுபானம் அருந்துவதாலும், அதிக கொழுப்பு காரணமாகவும், வைரஸ் தொற்று, சர்க்கரை நோய் போன்ற காரணங்களாலும் கல்லீரல் சரியாக வேலை செய்யாமல் போகிறது. இதனால் சோர்வு, வாந்தி உணர்வு, மஞ்சள் காமாலை போன்ற பல பிரச்சனைகள் உண்டாகக்கூடும். எனவே கல்லீரலை பாதுகாக்க பப்பாளியை பயன்படுத்தலாம் என்றும் பப்பாளி என்பது கல்லீரலின் பாதுகாவலன் என்றும் சொல்லப்படுகிறது.

பப்பாளியில் இருக்கும் வைட்டமின் சி, வைட்டமின் இ, பீட்டா கரோட்டின் போன்ற ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் கல்லீரலில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. கொழுப்பு கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு பப்பாளி பெரிதும் பயன் தரும். இது உடலில் சேரும் நச்சுக்களை நீக்கி கல்லீரலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
பப்பாளியில் உள்ள என்சைம்கள் உணவை எளிதாக ஜீரணமாக்கி, கல்லீரல் மீதான அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் பப்பாளி சாறு அல்லது பப்பாளி விதை சாறு ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலை சுத்தமாக்கும். இதனால் வீக்கம் ஏற்படுவது தடுக்கப்படும். பப்பாளியில் இருக்கும் பைட்டோகெமிக்கல்கள் கல்லீரல் வீக்கத்தின் போது கல்லீரல் செல் குணமடைந்து சாதாரண நிலைக்கு திரும்ப உதவுகிறது.
எப்படி பயன்படுத்துவது?
பப்பாளியை நன்றாக சுத்தம் செய்து சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர கல்லீரல் வீக்கம் குறையும்.
சில பப்பாளி விதைகளை அரைத்து சிறிதளவு தேனுடன் கலந்து காலை நேரத்தில் குடிக்க வேண்டும். இதனை வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை குடித்து வர நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
இது தவிர பப்பாளியை உணவிலும் சேர்த்து சாப்பிடலாம்.
இருப்பினும் கர்ப்பிணி பெண்கள், கல்லீரல் நோய் தீவிரமாக இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இதனை பின்பற்றக் கூடாது.


