இன்றுள்ள காலத்தில் வெற்றிலை பாக்கு போடுவது கெட்ட பழக்கமாகவும் மது குடிப்பது சாதாரண பழக்கமாகவும் மாறி இருக்கிறது. பல ஆண்டுகளாக தமிழ் கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது தாம்பூலம் என்று சொல்லப்படும் வெற்றிலை, பாக்கு. இந்த வெற்றிலையும் பாக்கும் இருந்தாலே போதும் ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவார்கள் நம் முன்னோர்கள். அந்த அளவிற்கு பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சடங்குகளிலும் தவறாமல் இடம்பெறுவது வெற்றிலையும் பாக்கும் தான். ஆனால் அந்த பொருளை இன்றைய தலைமுறையினர்களும் இனிவரும் தலைமுறையினர்களும் மறந்துவிடும் அளவிற்கு நம் நாகரீகமும் வளர்ந்து விட்டது. இவ்வாறு வளர்ந்து வரும் நாகரீகம் நம் முன்னோர்கள் பின்பற்றிய பல நல்ல பழக்கங்களை மறக்க வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆம். வெற்றிலை, பாக்கு என்றால் என்ன? என்றும் கேட்கும் அடுத்த தலைமுறை வந்துவிட்டது. ஆனால் அந்த வெற்றிலையும் பாக்கும் எவ்வளவு நன்மைகளை தருகிறது என்பதை பற்றி தெரியுமா?
மலட்டுத்தன்மை, புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் என ஏகப்பட்ட நோய்களை குணப்படுத்தும் குணம் படைத்தது தான் வெற்றிலையும் பாக்கும். குறிப்பாக மலட்டுத்தன்மையை முற்றிலும் குணப்படுத்தும் மகத்துவம் கொண்டது வெற்றிலை. இன்றுள்ள பலருக்கும் உணவு பழக்கவழக்கங்களின் மாறுபாட்டால் மலட்டுத்தன்மை பிரச்சனை உருவாகிறது. இதன் காரணமாக இன்றைய தலைமுறையினர்கள் பலரும் கருத்தரிப்பு மையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். ஆனால் வெற்றிலையையும் பாக்கையும் மென்று சாப்பிட்டாலே கருத்தரிப்பு மையங்களை நோக்கி ஓடும் அவசியம் ஏற்படாது. எனவே இன்றைய தலைமுறையினர்களே நீங்கள் மட்டுமல்லாமல் உங்களின் அடுத்த தலைமுறையினர்களும் வெற்றிலை மற்றும் பாக்கின் மகத்துவத்தை எடுத்துக்கூறி அதனை இனியாவது பின்பற்றி பயன்பெறுங்கள். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.