spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்முடி வளர்ச்சியை தூண்டும் ரோஸ்மேரி எண்ணெய்.... நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

முடி வளர்ச்சியை தூண்டும் ரோஸ்மேரி எண்ணெய்…. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

-

- Advertisement -

ரோஸ்மேரி எண்ணெய் முடி வளர்ச்சியை தூண்டுவதாக சொல்லப்படுகிறது.முடி வளர்ச்சியை தூண்டும் ரோஸ்மேரி எண்ணெய்.... நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

ரோஸ்மேரி எனும் மூலிகை இலைகளை வைத்து எண்ணெய் தயாரிக்கலாம். இது தோல் நலம், உடல் வலி, நினைவாற்றல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. அதிலும் இது முடியின் வளர்ச்சியை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது.

we-r-hiring

ஏனென்றால் ரோஸ்மேரி எண்ணெயை உச்சந்தலையில் தேய்க்கும் போது ரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்கால்களுக்கு ஊட்டச்சத்துக்கள் செல்வது அதிகரிக்கப்படுகிறது. மேலும் இது உச்சந்தலையில் உண்டாகும் எரிச்சல், பொடுகு போன்ற பிரச்சினைகளையும் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள கார்னோசிக் அமிலம் இறந்த செல்களை புதுப்பித்து ஆரோக்கியமான சருமத்திற்கும் முடிக்கும் நல்ல பலன் தருகிறது.

ரோஸ்மேரி எண்ணெய் தயாரிக்கும் முறைமுடி வளர்ச்சியை தூண்டும் ரோஸ்மேரி எண்ணெய்.... நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

ஒரு கப் அளவு உலர்ந்த அல்லது புதிய ரோஸ்மேரி இலைகள், ஒரு கப் அளவு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் ரோஸ்மேரி இலைகளையும், எண்ணெயையும் சேர்க்க வேண்டும். குறைந்த தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கொதிக்க விடக்கூடாது. அதன் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சில மணி நேரம் ஆற வைக்க வேண்டும். பின் அதனை வடிகட்டி கண்ணாடி ஜாடியில் சேமிக்க வேண்டும். இந்த எண்ணையை சூரிய ஒளியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறைமுடி வளர்ச்சியை தூண்டும் ரோஸ்மேரி எண்ணெய்.... நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெய் எடுத்து அதனை உச்சந்தலையில் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து மைல்டு ஷாம்பு போட்டு கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தலாம்.

குறிப்பு:

இந்த எண்ணெய் எல்லாருக்கும் பொருந்தாது. எனவே அலர்ஜி உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. மேலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறந்தது.

MUST READ