இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி பார்க்கலாம்.நம் சமையலறையில் டீ முதல் பிரியாணி வரை நாம் பயன்படுத்தும் இஞ்சியில் வைட்டமின் சி, பொட்டாசியம், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்றவை அடங்கி இருக்கிறது. எனவே இஞ்சி டீ செய்து குடிப்பதனால் உணவு செரிமானம் மேம்படும். மலச்சிக்கல் தடுக்கப்படும். இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும். ரத்த அழுத்தத்தை சீராக்கவும், இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்தவும் உதவுகிறது. இருப்பினும் இஞ்சி டீ குடிப்பதனால் சில தீமைகளும் இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது.
அதாவது இஞ்சி டீ சிலருக்கு அமிலக் குறைபாடு வாயு பிரச்சனையை ஏற்படுத்தும். வெறும் வயிற்றில் நெஞ்சுக்கு குடிப்பதனால் அதிகப்படியான எரிச்சல் ஏற்படக்கூடும். இஞ்சி என்பது ரத்தத்தை தளர்த்தும் தன்மை கொண்டதனால் Aspirin போன்ற மருந்து வகைகளை எடுத்துக் கொள்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் இஞ்சி டீ அதிகமாக குடித்தால் உடல் சூடு அதிகரிக்கும். இது தவிர இடுப்பு வலி அதிகரிக்க வாய்ப்பு உண்டு. எனவே கர்ப்பிணி பெண்கள் இஞ்சி டீ எடுத்துக் கொள்ளும்போது மருத்துவரின் ஆலோசனை தேவை. மற்றவர்கள் இஞ்சி டீயை ஒரே நாளில் அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவரின் உடல் நிலையை பொறுத்து பக்கவிளைவுகள் மாறுபடும். எனவே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.