Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்குளிர்கால சரும பிரச்சனைக்கு எளிய வழி!

குளிர்கால சரும பிரச்சனைக்கு எளிய வழி!

-

குளிர்கால சரும பிரச்சனைக்கு எளிய வழி!குளிர் காலத்தில் சரும பிரச்சனைகள் ஏற்பட்டு முகம் வறட்சியாகவும் அருவருப்பாகவும் தோற்றமளிக்கும். அதே சமயம் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் ஆகியவை எரிச்சலை உண்டாக்கும். அதேசமயம் அதிக குளிர் நாளும் முகம் கருமையாக மாறிவிடும். கெமிக்கல் நிறைந்த பொருட்கள் தற்சமயத்தில் நமக்கு கை கொடுத்தாலும் வருங்காலத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது. எனவே இயற்கை முறையில் இந்த ஒரே ஒரு டிப்ஸை பயன்படுத்தி குளிர்கால சரும பிரச்சனைக்கு குட் பை சொல்லுங்கள்.

குளிர்கால சரும பிரச்சனையை தடுக்க தேவையான பொருட்கள்:

அரை துண்டு பப்பாளி, 50 மில்லி லிட்டர் பால், சிறிதளவு தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை சரியான அளவுகளில் எடுத்துக் கொண்டு பப்பாளியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் பாலை எடுத்துக் கொண்டு மிதமான தீயில் சூடு படுத்திக் கொள்ள வேண்டும். பால் நன்கு சூடான பின் பாலை சிறிது நேரம் ஆற விட வேண்டும். குளிர்கால சரும பிரச்சனைக்கு எளிய வழி!பால் நன்கு ஆறிய  பின் பப்பாளியை மிக்ஸியில் சேர்த்து அதில் தேவையான அளவு பால் சேர்த்து பேஸ்ட் போன்று வரும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் குளிர் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகள் விரைவில் குணமடையும்.

சரும பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முன்பே இதை பயன்படுத்தினால் கூடுதல் சிறப்பு. இருந்த போதிலும் இம்முறையை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

MUST READ