spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நரம்பு தளர்ச்சிக்கான தீர்வுகள்!

நரம்பு தளர்ச்சிக்கான தீர்வுகள்!

-

- Advertisement -

நரம்புத்தளர்ச்சி என்பது நரம்பு மண்டலம் குறைபாடாக செயல்படும்போது ஏற்படக்கூடியது. இது உடல் தளர்ச்சி, கவனக்குறைவு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடுகிறது. நரம்பு தளர்ச்சிக்கான தீர்வுகள்!அதாவது வைட்டமின் பி குறைபாடு, மன அழுத்தம், தூக்கமின்மை, நீர் சத்து குறைபாடு, நீண்ட கால சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள் போன்ற காரணங்களால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுகிறது.

முருங்கைக்கீரை, பசலை கீரை, ஓமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவு வகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் நரம்பு தளர்ச்சியை தடுக்கலாம். தினமும் 2.5 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். இது தவிர தியானம், உடற்பயிற்சி செய்ய வேண்டும்.நரம்பு தளர்ச்சிக்கான தீர்வுகள்!

we-r-hiring

அதிகளவிலான சர்க்கரை உணவுகள், காரமான உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதிகமாக காபி, டீ குடிப்பது, புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதிகமாக மொபைல் பார்க்க கூடாது.நரம்பு தளர்ச்சிக்கான தீர்வுகள்!

மேலும் 6 முதல் 7 பாதாமை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இது நரம்பு தளர்ச்சியை தடுக்க உதவும். மன அமைதியை அதிகரிக்கும். எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும். இதிலிருந்து தேவையான கால்சியம், பாஸ்பரஸ் கிடைப்பதால் மூட்டு வலிக்கு தீர்வு கிடைக்கும்.

இருப்பினும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ