spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்யாரும் சொல்லாத சமையல் டிரிக்ஸ்!

யாரும் சொல்லாத சமையல் டிரிக்ஸ்!

-

- Advertisement -

சமையல் டிரிக்ஸ் சில பின்வருமாறு.யாரும் சொல்லாத சமையல் டிரிக்ஸ்!

  1. சாதம் ஒட்டாமல் இருக்க, சமைக்கும் தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு அல்லது சில துளிகள் எண்ணெய் சேர்க்க வேண்டும். இதனை பிரியாணி, ப்ரைட் ரைஸ் போன்ற உணவுகளை தயாரிக்கும் போது பின்பற்றலாம்.

2. குழம்பு போன்றவை அதிகமாக உப்பாகிவிட்டால் ஒரு சிறிய உருளைக்கிழங்கை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிட்டால் உருளைக்கிழங்கு உப்பை உறிஞ்சிவிடும்.யாரும் சொல்லாத சமையல் டிரிக்ஸ்!

we-r-hiring

3. வெங்காயத்தினை நறுக்கும் போது கண் எரிச்சலை தவிர்க்க வெங்காயத்தை நறுக்குவதற்கு முன்பாக 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கலாம் அல்லது தண்ணீரில் நனைத்து வெட்டலாம்.

4. பூண்டினை சுலபமாக உரிக்க பத்து வினாடிகள் சூடான தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அப்போது அதன் தோல் தானாகவே விலகும்.யாரும் சொல்லாத சமையல் டிரிக்ஸ்!

5. தக்காளி சாஸ் தயாரிக்கும் போது கசப்பு சுவை தெரிந்தால் ஒரு துளி அதில் வெண்ணெய் சேர்க்க சுவை சரியாகிவிடும்.

6. தோசை மாவு புளிக்கவில்லை எனில் அதில் ஒரு ஸ்பூன் அளவு தயிர் மற்றும் கால் ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா சேர்த்து இரண்டு மணி நேரம் வைத்துவிட்டால் தோசை மாவு விரைவில் புளித்து விடும்.

7. முட்டை பொறிக்கும்போது சிறிது பால் அல்லது தண்ணீர் சேர்த்து அடித்தால் முட்டை சுருண்டு போகாமல் மிருதுவாக வரும்.யாரும் சொல்லாத சமையல் டிரிக்ஸ்!

8. காரம் அதிகமாகிவிட்டால் சிறிது தயிர் அல்லது தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளலாம்.

9. கசப்பாக இருக்கும் பாகற்காயை நறுக்கி உப்பும், மஞ்சளும் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து கழுவினால் அதில் உள்ள கசப்புகள் நீங்கிவிடும்.

10. பச்சை மிளகாய் பிரிட்ஜில் நீண்ட நாட்கள் பசுமையாக இருக்க, காம்புகளை நீக்கி அதனை ஒரு காகிதத்தில் மடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்க வேண்டும்.

11. இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்த பிறகு அதில் சில துளி எண்ணெய் ஊற்றி வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

12. குழம்பு அதிகமாக தண்ணீராக இருந்தால் அதனை கெட்டியாக்க ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்க்கலாம்.யாரும் சொல்லாத சமையல் டிரிக்ஸ்!

13. இட்லி மென்மையாக வர மாவு அரைக்கும் போது அதில் சிறிது வெந்தயம் சேர்த்து அரைக்க வேண்டும்.

14. சப்பாத்தி மென்மையாக வர, மாவு பிசையும் போது தயிர் சேர்க்கலாம்.

15. பழைய தோசை மாவாக இருந்தால் அதில் சிறிது சோடா உப்பு சேர்த்தால் மொறுமொறு தோசை கிடைக்கும்.

16. பஜ்ஜி செய்யும்போது அதில் சிறிது ரவை சேர்த்தால் பஜ்ஜி மொறுமொறுப்பாக இருக்கும்.

MUST READ