கோதுமை மாவில் தேன் மற்றும் நெய் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வர இடுப்பு வலி குணமடையும்.
மிளகு, சுக்கு, பூண்டு, பொடுதலை இலை, பனைவெல்லம் ஆகியவற்றை மையாக அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வர இடுப்பு வலி விரைவில் குணமடையும்.

நுணா இலையின் சாறு பிழிந்து அதனை இடுப்பில் தடவி வர இடுப்பு வலி சரியாகும்.
நொச்சி இலை, வெள்ளைப் பூண்டு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து, பின் அரைத்த கலவையை வேப்ப எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி அதனை இடுப்பில் தடவி வந்தாலும் இடுப்பு வலி குணமாகும்.
வெள்ளைப் பூண்,டு கருப்பட்டி ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வர இடுப்பு வலி குணமடையும்.
துத்திக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குணமடையும் வாய்ப்பு உள்ளது.
வெந்தயத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து சாப்பிட்டு வருவது இடுப்பு வலிக்கு நல்ல தீர்வாக அமையும்.
இலுப்பை எண்ணெயை காய்ச்சி, சூடு பொறுக்கும் அளவில் இருக்கும் சமயத்தில் இடுப்பில் தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வர இடுப்பு வலி சரியாவது மட்டுமல்லாமல் நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகளும் சரியாகும்.
இருப்பினும் இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.