Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இரவில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்!

இரவில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்!

-

இன்றுள்ள காலகட்டத்தில் செல்போன் இல்லாத மனிதர்களை காண்பது மிகவும் கடினம். காலையில் கண்விழித்ததும் செல்போனும் கையுமாக தான் இருக்கிறோம். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரின் வாழ்க்கையும் செல்போனில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இரவில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்!அதிலும் பெரும்பாலானவர்கள் இரவில் தூங்குவதற்கு முன்பாக செல்போன் பயன்படுத்துகிறோம். இதனால் என்னென்ன பின் விளைவுகள் ஏற்படுகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அதாவது நாம் தூங்குவதற்கு மூளையில் மெலடோனின் ஹார்மோன் சுரப்பு தான் காரணம். ஆனால் நாம் செல்போன்களை பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளிவரும் வெளிச்சம் மெலடோனின் ஹார்மோனை சீராக சுரக்க விடாமல் தடுக்கிறது. இதன் விளைவாக தூக்கமின்மை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், கண்வலியும் ஏற்படுகின்றன. இரவில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்!அதேசமயம் செல்போன்களில் இருந்து வெளிவரும் நீல நிற ஒளி நீண்ட நேரம் நம் கண்களில் படும்போது ரெட்டினா பகுதி பாதிப்படைகிறது. இது விழித்திரைக்கு சேதத்தை ஏற்படுத்தி பார்வைத் திறனை குறைக்கிறது. மேலும் இரவில் செல்போன்கள் பயன்படுத்துவதால் மாரடைப்பு, நெஞ்செரிச்சல், புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இன்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இரவில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்!

அதுமட்டுமில்லாமல் நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்பது அவசியம். ஆனால் நாம் தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் செல்போன்களை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மன அழுத்தம் உண்டாக வழிவகுக்கிறது. எனவே இரவு நேரங்களில் செல்போன் பயன்படுத்துவதை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

MUST READ