செம்பருத்தி தேநீரின் முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.
செம்பருத்தி தேநீரில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும், இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும், உடல் எடையை குறைப்பதிலும், தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது. செம்பருத்தி தேநீரில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், மன அழுத்தத்தை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

செம்பருத்தி தேநீர் தயாரிக்கும் முறை:
உலர்த்திய செம்பருத்தி பூ இதழ்கள் – இரண்டு ஸ்பூன்
(புதிய செம்பருத்தி இதழ்கள்) – 5
அரை கப் அளவு தண்ணீர் மற்றும் தேன் அல்லது எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்த பின்னர் மிதமான தீயில் வைத்து செம்பருத்தி இதழ்களை சேர்க்க வேண்டும். செம்பருத்தி இதழ்களை தண்ணீரில் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் கொதிக்க விட்டு பின் ஊற விட வேண்டும். நீர் சிவப்பாக மாறிய பின்னர் அதனை வடிகட்டி தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பருக வேண்டும். இதனை ஒரு நாளைக்கு அரை கப் முதல் ஒரு கப் அளவு குடித்தால் போதுமானது. இதனை காலை வெறும் வயிற்றில் அல்லது இரவில் உணவிற்கு பிறகு குடிக்கலாம்.
குறிப்பு :
- குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
2. கர்ப்ப காலத்தில் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது.
3. மாதவிடாய் அதிகமாக வரும் பெண்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது.
4. அலர்ஜி உள்ளவர்களும் இதை தவிர்க்க வேண்டும்.
இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


