ஸ்வீட் கார்னில் மறைந்திருக்கும் அதிசய குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஸ்வீட் கார்ன் என்பது ஆரோக்கியமான சிற்றுண்டியாக விளங்குகிறது. ஸ்வீட் கார்னில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், போலிக் ஆசிட், வைட்டமின் சி போன்றவை காணப்படுகின்றன. மேலும் மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவைகளும் அடங்கியுள்ளன.
ஸ்வீட் கார்ன் சாப்பிடுவதால் நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் சரி செய்யப்படும்.
இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் உள்ள கார்போஹைட்ரேட் உடலுக்கு உடனடி ஆற்றல் தரும். இது கண் பார்வைக்கு நல்லது.
இது தவிர ஸ்வீட் கார்ன் ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தி, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக நடைபெற உதவியாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கர்ப்பிணி பெண்களுக்கும் இது நல்ல பலனை தருகிறது. குறிப்பாக கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு இது பெரிதும் பயன்படுகிறது. குழந்தைகளும் இதை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரோட்டின் கிடைக்கும். குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்க உதவுவதோடு, சருமத்தையும் பாதுகாக்க உதவுகிறது.
எனவே ஸ்வீட் கார்னை எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. இருப்பினும் ஸ்வீட் கார்னை எண்ணெயில் பொரித்தோ, அதிக அளவில் உப்பு சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.