கத்தரிக்காயில் புரதம், கொழுப்பு, வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அது மட்டும் இல்லாமல் கத்திரிக்காயானது ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டிருக்கிறது. இருப்பினும் சிலர் இந்த கத்திரிக்காயை மறந்தும் கூட எடுத்துக்க கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது.
அதாவது தோலில் அலர்ஜி இருப்பவர்கள், ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள், கீல்வாதம் உள்ளவர்கள், சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் கத்திரிக்காயை அதிகம் ம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கத்திரிக்காயில் உள்ள ஆக்சலேட் என்ற தனிமம் உங்கள் உடலில் உள்ள பிரச்சனையை அதிகரிக்க செய்யும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அளவு கட்டுப்பாடுடன் எடுத்துக் கொள்ளலாம்.

இது தவிர ரத்தப் பற்றாக்குறை இருந்தால் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது. இது இரும்பு சத்து குறைபாட்டை இன்னும் அதிகரிக்கும். அடுத்தது செரிமான அமைப்பு பலவீனமாக இருந்தாலும், வயிறு அடிக்கடி தொந்தரவு செய்தாலும் கத்தரிக்காயை மறந்தும் கூட சாப்பிடக்கூடாது. அசிடிட்டி பிரச்சனை இருப்பின் கத்திரிக்காயை தவிர்த்து விடுவது நல்லது. மேலும் கண்களில் எரியும் உணர்வு போன்ற ஏதேனும் பிரச்சனை இருந்தால் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது. இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.