லைஃப்ஸ்டைல்

தும்பை பூவின் மருத்துவ குணங்கள்!

Published by
Yoga
Share

தும்பைப் பூவை பற்றி அறியாதவர்கள் எவரும் இலர். தும்பை செடியின் இலை மற்றும் பூ ஆகிய இரண்டிலுமே பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

1. தும்பை பூவை , பாலில் போட்டு நன்கு காய்ச்சி குடித்து வந்தால் சளி தொல்லையை விரைவில் குணப்படுத்தலாம்.

2. தும்பை இலையை அரைத்து, வடிகட்டி அதில் கிடைக்கும் சாற்றை காலை வெறும் வயிற்றில் மூன்று ஸ்பூன் அளவு குடித்து வந்தால் இளைப்பு பிரச்சனை சரியாகும்.தும்பை பூவின் மருத்துவ குணங்கள்!

3. சிறிதளவு தும்பை பூக்களை எடுத்து கசக்கி அதன் சாற்றை மூக்கில் இரண்டு சொட்டு விட்டால் தீராத தலைவலியும் பறந்து போகும்.

4. 25 கிராம் அளவிற்கு தும்பைப் பூக்களை எடுத்து அதனை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி,எண்ணெய் குளிர்ந்த பின் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி தீரும்.

5. தும்பை பூ சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.

6. தும்பை இலைகளை கசக்கி விஷக்கடி ஏற்பட்ட இடத்தில் துணியுடன் சேர்த்து கட்டினால் விஷம் வெளியேறும்.

7. தும்பை பூ மற்றும் தும்பை இலை இரண்டையும் சம அளவு எடுத்து கசக்கி அதில் வரும் சாறை மூக்கில் விட்டால் மூக்கிலிருந்து வரும் ரத்தம் நின்றுவிடும்.

Show comments
Published by
Yoga
Tags: Lifestyle Medical benefits Thumbai Poo தும்பை பூ மருத்துவ குணங்கள் லைஃப்ஸ்டைல்