வாழைப்பூ பருப்பு உசிலி செய்ய தேவையான பொருட்கள்:
நறுக்கிய வாழைப்பூ – 2 கப்
கடலைப்பருப்பு – 100 கிராம்
துவரம் பருப்பு – ஒரு கைப்பிடி அளவு காய்ந்த மிளகாய் – 7
மல்லித்தூள் – ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் ஆகியவற்றை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை:
துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பு ஆகிய இரண்டையும் நன்கு கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
ஊற வைத்த பின்னர் அதில் காய்ந்த மிளகாய், தனியா, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடான பின் அதில் நறுக்கிய வாழைப்பூவையும் உப்பையும் சேர்த்து வதக்கி விட வேண்டும். அத்துடன் சிறிதளவு மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்க வேண்டும்.
இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் அரைத்து வைத்திருக்கும் பருப்பு கலவையை சிறு உருண்டைகளாக பிடித்து பத்து நிமிடங்கள் ஆவியில் வேக வைக்க வேண்டும். அதன் பின் பருப்பு கலவை உருண்டையை ஆற வைத்து உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மீண்டும் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்க வேண்டும். அத்துடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பு கலவையையும் வாழைப்பூவையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
இப்போது அருமையான வாழைப்பூ பருப்பு உசிலி தயார். இதை நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.