Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆலிவ் எண்ணெயில் சமைப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

ஆலிவ் எண்ணெயில் சமைப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

-

- Advertisement -

ஆலிவ் எண்ணெயில் சமைப்பதால் கிடைக்கும் நன்மைகள்!நாம் சமைப்பதற்கு‌ பொதுவாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துவோம். அதுபோல ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதாவது ஆலிவ் எண்ணெய் மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறதாம்.ஆலிவ் எண்ணெயில் சமைப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

இந்த எண்ணெயில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு காரணிகளும் ஆக்சிஜனேற்ற பண்புகளும் நம் உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து மூளையை பாதுகாக்க உதவுகிறது. அதேசமயம் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்கவும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் மூலப் பொருளாக பயன்படுகிறது. மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்வதனால் நல்ல தீர்வு கிடைக்கும். இதில் இருக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் பசியின்மையை கட்டுப்படுத்தி முழுமையாக உணர வைக்கும். இதனால் விரைவில் உடல் எடையை குறைக்கலாம். ஆகவே தொடர்ந்து ஆலிவ் எண்ணெயை சமையலில் சேர்த்து பயன்படுத்துவது நல்லது.ஆலிவ் எண்ணெயில் சமைப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

ஏற்கனவே ஆலிவ் எண்ணெயானது சருமத்தை வறட்சியில் இருந்து மீட்டெடுக்க உதவுகிறது. இருப்பினும் இந்த ஆலிவ் எண்ணெய், சருமத்திற்கு பயன்படுவதாக இருந்தாலும் சமையலில் சேர்க்கப்படுவதாக இருந்தாலும் அது வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்திய நாட்டில் உள்ளவர்களுக்கு அது எதிர்பார்த்த பலனை தருவதில்லை என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே ஆலிவ் எண்ணெயினால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.

MUST READ