Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இந்த லீவுக்கு குட்டீஸ்களுக்கு இனிப்பு பூரி செஞ்சு கொடுங்க!

இந்த லீவுக்கு குட்டீஸ்களுக்கு இனிப்பு பூரி செஞ்சு கொடுங்க!

-

இனிப்பு பூரி செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – அரை கிலோ
சர்க்கரை – 3 கப்
முந்திரி – 25
ஏலக்காய் பொடி – ஒரு சிட்டிகை
கேசரி பவுடர் – 1/4 தேக்கரண்டி
சோடா உப்பு – 1 சிட்டிகை
உப்பு – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – 2 கப்
நெய் – சிறிதளவுஇந்த லீவுக்கு குட்டீஸ்களுக்கு இனிப்பு பூரி செஞ்சு கொடுங்க!

செய்முறை

முதலில் கோதுமை மாவை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் முந்திரியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதில் கேசரி பவுடரை கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு பெரிய தட்டில் சலித்து வைத்த கோதுமை மாவை எடுத்து அதில் கலந்து வைத்திருக்கும் தண்ணீரை ஊற்றி பிசைய வேண்டும். சப்பாத்தி செய்ய எப்படி மிருதுவாக வரும் வரை பிசைவோமோ அதேபோல் கையில் ஒட்டாமல் இருக்கும் வரை பிசைய வேண்டும்.

பின் பிசைந்து வைத்துள்ள மாவை நெல்லிக்காய் அளவு ஒரு டீ டீ அதனை சிறிய வட்டமாக திரட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது திரட்டிய மாவை அப்படியே சுருட்டி கத்தியால் மூன்று பாகங்களாக நறுக்கி பின்னர் செங்குத்தாக வைத்து அழுத்தி சப்பாத்தி கட்டையில் வைத்து அதிக அழுத்தம் கொடுத்து கேட்காமல் வட்டமாக தேய்த்து சிறிய பூரி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம் வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு போன்று காய்ச்சிக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் அளவு நெய் ஊற்ற வேண்டும். அந்தப் பாகில் ஏலக்காய் பொடியை சேர்த்து கலக்க வேண்டும்.இந்த லீவுக்கு குட்டீஸ்களுக்கு இனிப்பு பூரி செஞ்சு கொடுங்க!

இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானதும் திரட்டி வைத்திருக்கும் பூரியை போட்டு இருபுறமும் வேகவிட்டு பொரித்து எடுக்க வேண்டும். அதன் பின்னர் பொரித்து வைத்திருக்கும் பூரிகளை சர்க்கரைப் பாகில் போட்டு வைக்க வேண்டும்.

பூரியில் பாகு நன்கு ஊறியதும் தட்டில் எடுத்து வைத்து பரிமாறலாம். மேலும் வறுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பையும் சேர்த்து அலங்கரித்துக் கொள்ளலாம்.

இப்போது இனிப்பான பூரி தயார்.

இந்த பூரியை மைதா மாவில் செய்தால் கூடுதல் சுவை தரும். ஆனால் இது குழந்தைகளுக்கு ஆரோக்கியமற்றது என்பதால் கோதுமை மாவில் செய்வதே சிறந்தது.

MUST READ