Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்என்னது நெல்லிக்காயில் அல்வா செய்யலாமா?

என்னது நெல்லிக்காயில் அல்வா செய்யலாமா?

-

நெல்லிக்காய் அல்வா செய்வது எப்படி?

நெல்லிக்காய் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:என்னது நெல்லிக்காயில் அல்வா செய்யலாமா?

பெரிய நெல்லிக்காய் – 7
சர்க்கரை – 200 கிராம்
நெய் – 100 மில்லி
ஏலக்காய் தூள் – சிறிதளவு
முந்திரிப் பருப்பு – 10
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை

நெல்லிக்காய் அல்வா செய்முறை:

நெல்லிக்காய் அல்வா செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதனை அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். இப்போது அந்தக் கொதிக்கும் நீரில் பெரிய நெல்லிக்காயை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு பின்னர் உதிர்த்து, அதன் விதைகளை நீக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் விழுதை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் நாம் எடுத்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்து கிளறி விட வேண்டும். சர்க்கரை உருகி வந்த பிறகு கேசரி பவுடர் சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளற வேண்டும்.

இப்போது மீதம் இருக்கும் நெய்யை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி முந்திரிப் பருப்பினை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதற்கிடையில் அல்வாவை அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அல்வா கெட்டியாக வந்த பிறகு ஏலக்காய் தூள், முந்திரிப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும்.என்னது நெல்லிக்காயில் அல்வா செய்யலாமா?

இப்போது சுவையான நெல்லிக்காய் அல்வா தயார்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நெல்லிக்காய் அல்வாவை சாப்பிடலாம். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

MUST READ