spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அழகு அதிகரிக்க... இரவு தூங்குவதற்கு முன் இதை செய்யுங்கள்!

அழகு அதிகரிக்க… இரவு தூங்குவதற்கு முன் இதை செய்யுங்கள்!

-

- Advertisement -

அழகு அதிகரிக்க... இரவு தூங்குவதற்கு முன் இதை செய்யுங்கள்!இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் சில அழகு குறிப்புகளை பின்பற்றினால் நம் அழகு அதிகரிக்கும். அந்த வகையில் கெமிக்கல் நிறைந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையாகவே முக அழகை அதிகப்படுத்தலாம். அதே சமயம் வயதானாலும் இளமையாக இருக்கலாம்.

தற்போது அழகு குறிப்புகளை பற்றி பார்ப்போம்.

we-r-hiring

இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் கடலை மாவு ஒரு ஸ்பூன் பாசிப்பயறு மாவு ஆகியவற்றை சிறிதளவு நீரில் கலந்து முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் காயவைத்து கழுவ வேண்டும். இவ்வாறு தினம் செய்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.

முல்தானி மெட்டி பவுடர் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து, இரவு தூங்குவதற்கு முன்பாக முகத்தில் தேய்த்து கழுவி வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் குறைவதை காணலாம்.

சிறிதளவு கற்றாழை ஜெல்லினை எடுத்து அதனை முகத்தில் தேய்த்து ஐந்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வர வேண்டும். இதனை இரவு தூங்குவதற்கு முன் செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து முகம் பளிச்சென்று இருக்கும்.

இரவு தூங்கும் முன் வெள்ளரி பழத்தின் சாறு எடுத்து அதில் சிறிதளவு காய்ச்சாத பால் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அரை ஸ்பூன் அளவு தேனில் ஒரு சிட்டிகை அளவு பட்டை பொடி கலந்து அதனை முகத்தில் தேய்த்து கழுவி வர சருமம் மென்மையாக இருக்கும். இதனை இரவு தூங்கும் முன் செய்து வந்தால் கூடுதல் சிறப்பு.அழகு அதிகரிக்க... இரவு தூங்குவதற்கு முன் இதை செய்யுங்கள்!

இம்முறைகளை எல்லாம் ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ