Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இந்த கிறிஸ்மஸ்க்கு இப்படி ஒரு முறை சாக்லேட் கேக் செஞ்சு பாருங்க!

இந்த கிறிஸ்மஸ்க்கு இப்படி ஒரு முறை சாக்லேட் கேக் செஞ்சு பாருங்க!

-

- Advertisement -

பண்டிகை காலங்களில் பலகாரங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில் கிறிஸ்மஸ் என்றாலே கேக் தான். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேக் தற்போது வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

சாக்லேட் கேக் செய்ய தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 200 கிராம்
சர்க்கரை – 150 கிராம்
வெண்ணெய் – 150 கிராம்
பேக்கிங் பவுடர் – 1 டேபிள்ஸ்பூன்
முட்டை – 4
பால் – 250 மி.லி
கோக்கோ பவுடர் – 25 டேபிள்ஸ்பூன்இந்த கிறிஸ்மஸ்க்கு இப்படி ஒரு முறை சாக்லேட் கேக் செஞ்சு பாருங்க!

செய்முறை:

1. முதலில் சாக்லேட் கேக் செய்வதற்கு வெண்ணெயுடன் சர்க்கரையை போட்டு நன்றாக கலக்க வேண்டும்.

2. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நுரை வரும் வரை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

3. பின் மைதா மாவு, பேக்கிங் பவுடர், கோக்கோ பவுடர் ஆகிய மூன்றையும் சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

4. அதன் பின் மூன்றையும் நன்றாக கலந்து அதில் பாலை ஊற்றி கலக்கிக் கொள்ள வேண்டும்.

5. பேக்கிங் ட்ரே அல்லது ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் வெண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவு கலவையை அதில் பூச்சி சமமாக பரப்பி விட வேண்டும். பாத்திரம் என்றால் குக்கரில் 45 நிமிடங்கள் வைத்து வேக விட வேண்டும். மைக்ரோ ஓவென் என்றால் 30 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.இந்த கிறிஸ்மஸ்க்கு இப்படி ஒரு முறை சாக்லேட் கேக் செஞ்சு பாருங்க!

இப்போது சாக்லேட் கேக் ரெடி.

இந்த கேக்கை உங்களுக்குப் பிடித்த ஃபிளேவரிலும் செய்து கொள்ளலாம்.

MUST READ