Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நோன்பு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்!

நோன்பு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்!

-

ரமலான் என்பது உலகத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம்களுக்கு முக்கியமான பண்டிகையாகும். இந்த ரமலான் நேரத்தில் ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட விஷயங்களை தியாகம் செய்து கடுமையான நோன்பு இருப்பது அவர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்க்கையையும் மேம்படுத்துகிறது. நோன்பு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்!எனவே ரமலான் நோன்பு நேரங்களில் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஆரோக்கியமமற்ற உணவுகளை உண்பது நீரழிவு, இருதய நோய், அல்சர் போன்ற உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆதலால் நோன்பு நேரத்தில் நீடித்த ஆற்றலை வழங்கும் உணவுகள் பற்றி பார்க்கலாம். அதே சமயம் நாம் நாள் ஒன்றுக்கு குறைவான கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம் கிடையாது.நோன்பு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்!

தானிய வகை உணவுகள் ( குதிரைவாலி, சாமை, வரகு, சோளம், கேழ்வரகு, கோதுமை, கம்பு, திணை) போன்றவைகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் ரொட்டி செய்தும் சாப்பிடலாம். இருப்பினும் எண்ணெய் குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது. தானிய வகை உணவு வகைகளில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவும்.நோன்பு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்!

பின்னர் இறைச்சி, முட்டை, பருப்பு வகைகள் போன்றவைகளில் புரதச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இவை ஆரோக்கியமாக இருப்பதுடன் உங்களை திருப்தியாகவும் வைத்திருக்க உதவும். பேரிச்சம்பழம், அத்திப்பழம் போன்றவைகளிலும் அதிக சத்துக்கள் உள்ளன.நோன்பு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்!

வைட்டமின்கள் நிறைந்த உணவுகளையும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம். அதாவது பட்டாணி, பாசிப்பயறு, அவரைக்காய், பீன்ஸ் ஆகியவற்றின் நார்ச்சத்துக்கள் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் கொண்டக்கடலை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

நோன்பு நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மட்டுமல்லாமல் சமச்சீரான உணவுகளை சாப்பிடுவதும் நம் உடலில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது.நோன்பு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்!

நம் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவினை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஒரு கை அளவு அரிசி சாதம், சிறிதளவு பயிறு வகைகள், சிறிதளவு காய்கறிகள் இவ்வாறு நாம் சாப்பிடுவதில் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. அதேசமயம் இது வெயில் காலம் என்பதால் இந்த நேரத்தில் நோன்பு இருப்பவர்கள் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். நோன்பு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்!மேலும் தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை, பெர்ரி போன்ற நீர்ச்சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிடலாம். அதே சமயம் முட்டைக்கோஸ், சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் இளநீர் எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பது மட்டுமல்லாமல் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்களும் கிடைக்கின்றன. எனவே ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீர் ஆன உணவுகளுடன் உங்கள் நோன்பினை திறக்கவும்.

MUST READ