spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மழைக்காலத்தில் பயன்படும் மருத்துவ குறிப்புகள்!

மழைக்காலத்தில் பயன்படும் மருத்துவ குறிப்புகள்!

-

- Advertisement -
kadalkanni

பொதுவாக மழைக்காலத்தில் நாம் பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. அதன்படி மழைக்காலத்தில் தீங்கு விளைவிக்கும் நுண் கிருமிகளால் ஆபத்து ஏற்படக்கூடும். மழைக்காலத்தில் பயன்படும் மருத்துவ குறிப்புகள்!எனவே சில மருத்துவ குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் அது மழைக்காலத்தில் பெரிதும் பயன்படும்.

1. மழைக்காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்றவை ஏற்படக்கூடும். அவற்றை தடுக்க நாம் தினமும் இரவு பசும்பாலில் மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து காய்ச்சி குடித்து வரலாம். அதே சமயம் தேநீரில் துளசி, சுக்கு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவைகளையும் பயன்படுத்தலாம். மேலும் பூண்டு மற்றும் இஞ்சி ஆகிய இரண்டும் இயல்பிலேயே பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கும். எனவே இவை இரண்டும் காய்ச்சல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.மழைக்காலத்தில் பயன்படும் மருத்துவ குறிப்புகள்!
2. மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கிறது. எனவே நிலவேம்பு கசாயம் தயார் செய்து குடித்து வருவது நல்லது.
3. மழைக்காலத்தில் நீரேற்றத்துடன் இருப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
4. மழைக்காலத்தில் கொசு தொல்லைகள் அதிகமாக இருக்கும். எனவே கொசு விரட்டிகளை இயற்கையான முறையில் தயார் செய்து பயன்படுத்துங்கள். அதுதான் உடலுக்கும் நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதன்படி எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்து அதை இரண்டாக வெட்டி அந்த எலுமிச்சம் பழத்தினுள் 10 கிராம்புகளை சுற்றி குத்தி வைக்க வேண்டும். பின்னர் அதை அப்படியே கொசு இருக்கும் இடங்களில் வைத்து விட வேண்டும். இதனால் கொசுக்கள் நம்மை நெருங்கவும் வாய்ப்பிருக்காது. பெருகவும் வாய்ப்பு இருக்காது.மழைக்காலத்தில் பயன்படும் மருத்துவ குறிப்புகள்!
5. ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, கொய்யா ஆகியவைகளை தினமும் எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

6.மழைக்காலத்தில் ஏற்படும் தொண்டை கரகரப்புக்கு சுக்குத் தொண்டினை தோல் சீவி வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர தொண்டை கரகரப்பு நீங்கும்.மழைக்காலத்தில் பயன்படும் மருத்துவ குறிப்புகள்!7. அடுத்தது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு நெல்லிக்காயை வேகவைத்து அதை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து தயார் செய்யும் ரசத்துடன் கலந்து சாப்பிட்டு வர விரைவில் தீர்வு கிடைக்கும்.

இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகுவது மிகவும் சிறந்தது.

MUST READ