பூண்டு அன்றாட உணவில் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பல நன்மைகளையும் கொண்டுள்ளது. மேலும் வாயுத்தொல்லை உள்ளவர்கள் பூண்டை உண்பதால், பிரச்சனை தீரும். அதிலுள்ள மருத்துவ குணங்களால் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.
பூண்டில் ஆன்டிபயாடிக், வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. கொலஸ்டராலை குறைப்பதில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பல நன்மைகளை கொண்டுள்ளது.வைட்டமின் பி-6, வைட்டமின்-சி, நார்ச்சத்து மற்றும் புரதம் பூண்டில் ஏராளமாக உள்ளது.தினமும் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். ஆனால் மருத்துவா்களின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும். நல்ல செரிமானத்திற்கு பூண்டை உணவில் சேர்க்க வேண்டும். நிபுணர்களின் கூற்றுப்படி, உங்களுக்கு வாயு, அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், தினமும் ஒரு பல் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுலாம்.
ஒரு பல் பூண்டு சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது செரிமான சாறுகள் சுரக்க உதவுகிறது. இது வயிற்றின் இரைப்பை சாற்றின் PH அளவை மேம்படுத்துகிறது. இது வாயு உருவாவதற்கான சிக்கலை நீக்குகிறது. பூண்டை சாப்பிடுவதால் மலக்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு பிரச்சனைக்கு தீா்வு காணலாம். BP இருப்பவா்கள் பூண்டை சாப்பிட்டால், ரத்த ஓட்டத்தை சீராக்க இது மிகவும் உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காலையில் வெறும் வயிற்றில் 2 பல் பூண்டை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இந்த செயல்முறையில் பூண்டை பச்சையாக சாப்பிட வேண்டும்.
அடடா… ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா…



