பெண்கள் பொதுவாக கருவுற்ற நாளிலிருந்து சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் தான் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும். அதாவது கருவுற்ற நாளிலிருந்து முதல் ஆயிரம் நாட்கள் குழந்தையின் வளர்ச்சி என்பது மிகவும் அவசியம். அந்த ஆயிரம் நாட்களில் பாலூட்டும் தாய்மார்கள் சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் அது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அந்த முதல் ஆயிரம் நாட்கள் தாய்மார்கள் அனைவரும் கீரை வகைகள், நட்ஸ் வகைகள், பழ வகைகள் என ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை எடுத்துக் கொள்வதனால் பிற்காலத்தில் உங்களின் குழந்தை மிகவும் திறமையானவராக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பாலூட்டும் தாய்மார்கள் அனைவரும் தங்களின் உணவு வகைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுங்கள். மேலும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க மீன் வகைகள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. அடுத்ததாக பாலக் கீரை, பரட்டை கீரை, வெந்தயக்கீரை போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெந்தயத்தினை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அதை அப்படியே குடித்து வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். மேலும் பூண்டு, பெருஞ்சீரகம், சீரகம், எள் போன்றவைகளும் தாய்ப்பால் அதிகரிக்க உதவுகிறது.

தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் தாய்மார்களுக்கும் நன்மை பயக்கும். அதாவது உட்கார்ந்த இடத்திலேயே கிட்டத்தட்ட 500 கலோரிகள் வரை குறைக்கலாம். தாய்ப்பால் கொடுக்கும் போது உங்களுக்கு ஹாப்பி ஹார்மோன் எனும் ஹார்மோன்கள் சுரக்கும். அது மனநிலையை சந்தோஷமாக வைத்திருக்கும். இதன் மூலம் உங்களின் தாய்ப்பால் சுரப்பு அதிகரித்து குழந்தைகளும் ஆரோக்கியமாக வளர்வார்கள்.