Homeசெய்திகள்சினிமா ரசிகர்களுக்கான ட்ரீட்... நாளை வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சினிமா ரசிகர்களுக்கான ட்ரீட்… நாளை வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

-

நாளை ரிலீஸாகும் திரைப்படங்கள்.
ஆதிபுருஷ்

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. ராமாயண கதையை தழுவி உருவாக்கப்பட்ட இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சைஃப் அலிக்கான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.

டி சீரிஸ் நிறுவனம் மற்றும் ரெட்ரோபைல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்தப் படம் 2D மற்றும் 3D வடிவங்களில் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது.

பொம்மை

பிரபல நடிகர் எஸ் ஜே சூர்யா வின் நடிப்பில் பொம்மை எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தை ஏஞ்சல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கி நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. அதன் பின் கடந்தாண்டு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இந்த படம் நாளை வெளியாக இருக்கிறது.

எறும்பு

ஜார்ஜ் மரியான் மோனிகா சிவா சக்தி ரித்விக் உள்ளிட்டோரின் நடிப்பில் எறும்பு எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை போத படத்தை இயக்கிய ஜி சுரேஷ் இயக்கியுள்ளார்.

மன்ட்ரூ ஜிவிஎஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கிராமத்தில் வாழும் ஏழை எளிய மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

சார்லஸ் என்டர்பிரைசஸ்

சார்லஸ் என்டர்பிரைசஸ் எனும் மலையாள திரைப்படம் கடந்த மே மாதம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இத்திரைப்படத்தின் தமிழ் வடிவமானது நாளை தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுபாஷ் லலிதா சுப்பிரமணியம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஊர்வசி, பாலு வர்கீஸ், குரு சோமசுந்தரம், கலையரசன் போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. மேலும் இது ஒரு காமெடி படமாகும்.

MUST READ