Homeசெய்திகள்அரசியல்இலங்கை கடற்படையால் இதுவரை 1,223 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது - ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்

இலங்கை கடற்படையால் இதுவரை 1,223 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது – ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்

-

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி. பி. வில்சன் 2017ம் ஆண்டு முதல் இது வரை தமிழ் நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும்? அதில் எத்தனை பேர் இலங்கை சிறையில் உள்ளனர்? என்றும் அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு ஒன்றிய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இலங்கை கடற்படையால் இதுவரை 1,223 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது
கடற்படை

இதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன்,இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவத்தை மத்திய அரசு அளித்து வருவதாகவும், மீனவர்கள் கைது செய்யப்பட்டவுடன் ராஜாந்திர அடிப்படையில் உடனடியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு முதல் இது வரை 1,223 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 2017ம் ஆண்டு 441 தமிழக மீனவர்களும், 2018ம் ஆண்டு 156 தமிழக மீனவர்களும், 2019ம் ஆண்டில் 190 மீனவர்களும், 2020ம் ஆண்டில் 74 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாரு 2021ம் ஆண்டில் 143 மீனவர்களும், 2022ம் ஆண்டு 219 தமிழக மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் எழுத்து பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் பேச்சு வார்த்தைகளின் மூலமாக இந்த காலகட்டத்தில் 1,202 மீனவர்கள் இது வரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்
முரளீதரன்

அதே நேரத்தில் பேச்சு வார்த்தைகளின் மூலமாக இந்த காலகட்டத்தில் 1,202 மீனவர்கள் இது வரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் 2022 டிசம்பர் 2ம் தேதி நிலவரப்படி 21 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளதாகவும் முரளீதரன் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ