Homeசெய்திகள்அரசியல்தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பம்?.. விஜய்யை சந்திக்கிறாரா சி.வி.சண்முகம்!

தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பம்?.. விஜய்யை சந்திக்கிறாரா சி.வி.சண்முகம்!

-

- Advertisement -

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் விஜய்யை சி.வி.சண்முகம் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பம்?.. விஜய்யை சந்திக்கிறாரா சி.வி.சண்முகம்!

we-r-hiring

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிருப்தி மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளால் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அதிமுக மூத்த தலைவர் சி.வி. சண்முகம், விஜய் தரப்புடன் பேசுவதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய சூழலில், பெரும்பான்மையை எட்ட தமிழக வெற்றிக்கழகம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஆதரவு கடிதத்தை த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், த.வெ.க. தலைவர் விஜய் தனது முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். நீலாங்கரையில் இருந்து புறப்பட்டு பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்திற்கு வந்துள்ள விஜய், அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, அ.தி.மு.க.விலும் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. காலை நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்ற நிலையில், பின்னர் சி.வி.சண்முகம் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தனியே ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைக்கு பின்னர், சி.வி.சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குழு, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், தமிழக அரசியலில் இது மிகப்பெரிய திருப்பமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், இந்த சந்திப்பு குறித்து அ.தி.மு.க. அல்லது த.வெ.க. தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தவெகவுக்கு ஆதராவா? இன்று மாலை முடிவை அறிவிக்கிறார் திருமாவளவன்…

MUST READ