ஸ்டாலின் உலக மகா பெரிய நடிகர், அவரைப் போலவே மகனும் நடிக்கிறார்- ஜெயக்குமார்
ஸ்டாலின் உலக மகா பெரிய நடிகர், அவரைப் போலவே மகனும் நடிக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாட்டில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சுமார் 40 ஆயிரம் வாகனங்கள் மதுரையை நோக்கி படையெடுத்தன. மதுரை மாநாட்டிற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை. மதுரை மாநாட்டில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் முன்வரவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை காவல்துறை அமல்படுத்தவில்லை.
நீட் விவகாரத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கும் வாரிசு அமைச்சரை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள். திமுக எம்பிக்கள் டெல்லியில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? போகாத ஊருக்கு வழி சொல்பவர்கள்தான் ஸ்டாலினும், உதயநிதியும்…. ஸ்டாலின் உலக மகா பெரிய நடிகர், அவரைப் போலவே மகனும் நடிக்கிறார். 17 ஆண்டுகள் மத்தியில் அதிகாரத்தில் இருந்த திமுக, தமிழகத்திற்கு எந்த உரிமையை பெற்றுத்தந்தது?” எனக் கேள்வி எழுப்பினார்.