தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவி வந்த அரசியல் இழுபறி தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ஒருபுறம் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மறுபுறம் திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிரடியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கடிதம் வழங்கியுள்ளது.
விசிக-வின் அதிரடி முடிவு: விஜய்க்கு மெஜாரிட்டி!
நீண்ட இழுபறிக்குப் பிறகு, விசிக தலைவர் திருமாவளவன் இன்று காலை விஜய்யை நேரில் சந்தித்து தனது கட்சியின் 2 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை உறுதி செய்தார்.

தற்போதைய பலம்: 108 (தவெக) + 5 (காங்கிரஸ்) + 2 (சிபிஐ) + 2 (சிபிஎம்) + 2 (விசிக) = 119. இதன் மூலம் ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை விஜய் கடந்துள்ளார். இதனால் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய் பதவியேற்பது உறுதியாகியுள்ளது.
அதிமுகவில் பிளவு: சி.வி. சண்முகத்தின் “தனி வழி”
விஜய் தரப்பு மெஜாரிட்டியை நெருங்கிய சூழலில், அதிமுகவில் பிளவு உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முடிவுகளில் அதிருப்தி அடைந்த சி.வி. சண்முகம், தனக்கு ஆதரவான 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களுடன் தனியாகச் செயல்படத் தொடங்கியுள்ளார். “கட்சியைக் காக்கவும், மக்கள் தீர்ப்பை மதிக்கவும் எடப்பாடி தவறிவிட்டார்” என சி.வி. சண்முகம் தரப்பினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
தவெக-விற்கு மறைமுக ஆதரவு? ஆட்சியில் பங்கெடுக்கும் நோக்கில் சி.வி. சண்முகம் தலைமையிலான குழுவினர் புதிய கூட்டணியை ஆதரிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இந்த அதிருப்திக் குழுவை சமாதானப்படுத்த எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் அதிமுக அதிகாரப்பூர்வமாக இரண்டாக உடையும் விளிம்பில் உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, 108 இடங்களைப் பெற்றுத் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தற்போது மற்ற கட்சிகளின் ஆதரவுடன் 119 இடங்களை எட்டிப் பிடித்து ஆட்சி அமைக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது. இதுவரை திமுக கூட்டணியின் பலமாகப் பார்க்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), அரசியல் வட்டாரத்தின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து 2 எம்.எல்.ஏ-க்களுடன் தவெக-வோடு கைகோர்த்துள்ளது. அதே வேளையில், 47 இடங்களைப் பெற்றுத் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்த அதிமுகவில், எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமைக்கு எதிராகச் சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு குழுவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் ‘இபிஎஸ் அணி’ மற்றும் ‘சி.வி. சண்முகம் அணி’ என அதிமுக அதிகாரப்பூர்வமாகப் பிளவுபட்டு, பெரும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
விசிக-வின் ஆதரவு கிடைத்த சில நிமிடங்களிலேயே, சி.வி. சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தற்போது தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். “தமிழக அரசியலில் இது ஒரு புதிய சகாப்தம். பழைய கூட்டணிகள் உடைந்து புதிய துருவங்கள் உருவாகியுள்ளன.” என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளானர்.
தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பம்?.. விஜய்யை சந்திக்கிறாரா சி.வி.சண்முகம்!
