Homeசெய்திகள்அரசியல்வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஜனநாயக கொண்டாட்டத்தை அழகாக வேண்டும் -  பிரதமர் நரேந்திர மோடி

வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஜனநாயக கொண்டாட்டத்தை அழகாக வேண்டும் –  பிரதமர் நரேந்திர மோடி

-

- Advertisement -

மராட்டியம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்!வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஜனநாயக கொண்டாட்டத்தை அழகாக வேண்டும் -  பிரதமர் நரேந்திர மோடி

மராட்டிய  மாநிலத்தின் 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேப்போல் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 38 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அதிக அளவிலான வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரக்கூடிய வாக்குப்பதிவில் வாக்காளர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு ஜனநாயக கொண்டாட்டத்தை மேலும் அழகாக வேண்டும் எனவும், குறிப்பாக இளைஞர்களும் பெண்களும் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் அதிக அளவிலான வாக்காளர்கள் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் எனவும் முதல் முறை வாக்காளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநில மக்களின் ஒவ்வொரு வாக்கும் மாநிலத்தின் பலம் என பதிவிட்டுள்ளார்.

எல்ஐசி இணையதளத்தில் ஹிந்தி திணிப்பு: பொங்கி எழுந்த அரசியல் கட்சி தலைவர்கள்

we-r-hiring

MUST READ