Homeசெய்திகள்அரசியல்அமித்ஷா அடித்த அடி! பணிந்தது திமுக!

அமித்ஷா அடித்த அடி! பணிந்தது திமுக!

-

அமித்ஷா அடித்த அடி! பணிந்தது திமுக!
அமித்ஷா ஸ்டாலின்

அமித்ஷா வந்தபோது பவர் கட் செய்ததால் தான் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பியூஸை பிடுங்கிவிட்டார்கள் என்ற பேச்சு இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது, விஐபிக்கள் வரும் போது மின் தடை செய்யக்கூடாது என்று மின்வாரியத்திற்கு தமிழக அரசு போட்டிருக்கும் உத்தரவு.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிக்க தமிழகம் வந்திருந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கி காரில் ஏறிய போது மின்வெட்டு ஏற்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையின் போது மின்வெட்டா? என்று அதிர்ச்சி அடைந்த பாஜகவினர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜகவினர் கொதித்தெழுந்து வந்தனர். ஆனால், திமுகவினரோ, அமித்ஷாவுக்கே பெப்பே காட்டிவிட்டார் எங்க அண்ணன் என்று நெஞ்சுநிமிர்த்தி பேசிக்கொண்டனர்.

செந்தில்பாலாஜியின் உயிருக்கு ஆபத்தா? உச்சநீதிமன்றத்தை எதிர்க்கிறாரா ஸ்டாலின்?
ஸ்டாலின் செந்தில்பாலாஜி

இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்து இருப்பதை உணர்ந்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையின் போது நடந்த மின்வெட்டு என்பது தற்செயலாக நடந்தது . அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது என்று விளக்கம் அளித்து இருந்தார். ஏற்கனவே செந்தில் பாலாஜியை டார்கெட் செய்து அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரி துறையினர் ரெய்டு நடத்தி வந்த நிலையில், ரெய்டுக்கு வந்த அதிகாரிகளை திட்டி தீர்த்து அடாவடி செய்த அமைச்சரின் ஆதரவாளர்கள், கிளம்பு கிளம்பு அந்துபோச்சு என்று போஸ்டர் அடித்தும் ஒட்டி வெறுப்பேற்றினர்.

வருமான வரித்துறையினருக்கு நடந்த இந்த அவமானத்தால் டெல்லி கண் சிவந்திருந்தது. இந்த நிலையில் பவர் கட் விவகாரம் விஸ்வரூம் எடுக்க, ஒரு மத்திய உள்துறை அமைச்சருக்கே இந்த கதியா? உள்துறை அமைச்சர் வருகிறார் என்ற போது பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனிக்க வேண்டாமா? என்று பாஜகவினர் ஆத்திரப்பட்டு வந்தனர்.

பக்காவாக பிளான் போட்ட அமலாக்கத்துறை! படுத்துக்கொண்டு காலி செய்த செந்தில்பாலாஜி! பரபரப்பு பின்னணி
காவேரி

இந்த சம்பவத்திற்கு பின்னர் தான் செந்தில் பாலாஜி இடம் 18 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் அவரை கைது செய்து அழைத்துச் செல்ல முற்பட்டு இருக்கிறது அமலாக்கத்துறை . ஆனால் திடீரென்று செந்தில் பாலாஜி தன் உடல் நிலையை காரணம் காட்டி கதறி அழுதால் டெல்லிக்கு கொண்டு செல்லப்படும் முடிவு நடைபெறாமல் போய் தமிழகத்திலேயே செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை வந்தது.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நீதிமன்றத்தின் அனுமதி பெற்று காவேரி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

sekar babu press meet
சேகர்பாபு

அவர் எஸ். எஸ். சிவசங்கர், அமைச்சர் பி. கே. சேகர்பாபு என்று பலரையும் டார்கெட் செய்திருக்கிறது பாஜக என்ற பரபரப்பு பேச்சு பரவி வரும் நிலையில் , தமிழக அரசு ஒரு அதிரடி உத்தரவை போட்டு இருக்கிறது. தமிழகத்தின் மின்சாரத் துறையில் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில், முக்கிய பிரமுகர்கள் வருகையின் போதும், முக்கிய அரசு நிகழ்வுகளின் போதும் நிகழ்வு நடைபெறுகின்ற இடங்களையும் மின்சார வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து , மாற்று ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் . முக்கிய பிரமுகர்கள் வருகை செய்யும்போது அந்த நிகழ்வு நடைபெறும் இடங்களில் மின் வாரிய பொறியாளர்களும், ஊழியர்களும் பணியில் இருக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டிருக்கிறது.

அமித்ஷா வந்து சென்றபின்னரும் பவர் கட் விவகாரத்தை பாஜக விடாமல் விமர்சித்து வந்த நிலையிலும், இந்த அறிக்கை வெளியாகவில்லை. செந்தில்பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு பின்னர் இந்த அதிரடி உத்தரவு போடப்பட்டிருக்கிறது என்றால், இந்த அதிரடி கைதுக்கு அந்த பவர் கட்தான் காரணம் என்று உணர்ந்துவிட்டது திமுக. அமித்ஷா அடித்த அடியில் பணிந்துவிட்டது திமுக என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

MUST READ