spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்விஜயின் செயலால்தான் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது - அமைச்சர் எ.வ. வேலு

விஜயின் செயலால்தான் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது – அமைச்சர் எ.வ. வேலு

-

- Advertisement -

விஜயின் செயலால்தான் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது என அமைச்சர் எ.வ. வேலு ஆவேசமாக சட்டப்பேரவையில் கூறியுள்ளாா்.விஜயின் செயலால்தான் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது - அமைச்சர் எ.வ. வேலு கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தாா்.  அவரைத் தொடந்து இந்த சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் எ.வ. வேலு, கரூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் நெரிசல் ஏற்படவில்லை. கரூர் சம்பவத்தைவிட அதிக கூட்டம் எதிர்க்கட்சித் தலைவருக்கு கூடியது; அங்கு ஒன்றும் நடக்கவில்லை.

காரணம், எதிர்க் கட்சித் தலைவர் பேசுவதை கவனிக்க வருகிறார்கள்; அவரும் பேருந்தில் ஏறி பேசுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் பேருந்தின் மீது ஏறி இரண்டு பக்கமும் கை காட்டுவதால் நெரிசல் ஏற்படவில்லை. விஜய் உள்ளேயே அமர்ந்து செல்கிறார்; பேசும் இடத்தில் மட்டுமே மேலே வருகிறார்; அதனால் நெரிசல் ஏற்பட்டது.  மேலும் கரூரில் காவல் துறை பொறுப்புடன் மிகச் சிறப்பாகவே செயல்பட்டது என்று கூறினார்.

திபாவளியையொட்டி 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்..! எங்கே தெரியுமா? – தாம்பரம் மாநகர காவல் அறிவிப்பு

we-r-hiring

MUST READ