spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அதிமுகவால் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவலுக்கு பதில் கூற முடியாது - செந்தில் பாலாஜி...

அதிமுகவால் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவலுக்கு பதில் கூற முடியாது – செந்தில் பாலாஜி ஆவேசம்

-

- Advertisement -

புதிய பேருந்து நிலையம் குறித்து அதிமுக சார்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவலுக்கு பதில் கூற முடியாது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் பேட்டியளித்துள்ளாா்.அதிமுகவால் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவலுக்கு பதில் கூற முடியாது - செந்தில் பாலாஜி ஆவேசம்கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று நேரடியாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்  கடந்த நான்கு ஆண்டுகளில் கரூர் மற்றும் தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி உள்ளார் என தெரிவித்தார்.

புதிய பேருந்து நிலையம் காலை மாலை போக்குவரத்து நெரிசல் குறித்து கேள்விக்கு அதிமுக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவலுக்கு பதில் கூற முடியாது புதிய பேருந்து நிலையம் பெருமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பொதுமக்களே தெரிவித்து வருகின்றனர். புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்திற்கு 24 மணி நேரமும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கரூர் மாவட்டத்திற்கு தேவையான மேம்பாலப் பணிகள் குறித்து விரைவில் அதற்கான தொகை ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்க இருப்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகள் மாநகராட்சி துணை மேயர் மற்றும் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அல்வாவும் ஒரு வகை உணவு தான், தேவைப்படும் இடத்தில் அதையும் முதல்வர் பரிமாறுவார் – சேகர்பாபு பதிலடி

we-r-hiring

MUST READ