பிரசாந்த் கிஷோரின் ஜன சூராஜ் கட்சி கணிசமான வாக்குகளை பெறும் என பீகாரில் வாழும் தென்னிந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.பீகார் மாநிலத்தில் உள்ள 241 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதி இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான பாஜக, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும், மகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் கட்சியும் பீகார் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர்.
பீகார் தேர்தல் களம் குறித்து தலைநகர் பாட்னாவில் உள்ள தென்னிந்தியர்களை பொறுத்தவரை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பீகாரில் வசித்து வருவதாகவும், 20 ஆண்டுகளுக்கு முன் பீகாரில் வன்முறை குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தற்போது பீகாரில் குற்றச்சம்பவங்கள் குறைந்து கிராமப்புறங்களிலும் கல்வி நகர பகுதிகளில் வளர்ச்சி மேம்பாட்டு பணிகளை நிதிஷ்குமார் அரசு மேற்கொண்டு வருகிறது. நிதிஷ் குமாருக்கு நகரபகுதிகளில் ஆதரவு இருந்தாலும் கிராம பகுதிகளில் லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவிற்கு ஆதரவு உள்ளது என தெரிவிக்கின்றனர்.

இரண்டு கட்சிகளை கடந்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன சூராஸ் கட்சிக்கும் பொதுமக்களிடையே கணிசமான ஆதரவு உள்ளது சாதி மதம் கடந்த கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து பிரசாந்த் கிஷோர் ஆழமாக பேசுவதாக அவருக்கு ஆதரவு உள்ளது.
கரூர் வழக்கில் சிபிஐயால் புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிவரும் என பாமக நம்புகிறது – அன்புமணி