spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ஜி.டி.நாயுடு பாலம் என்பதை ஜி.டி. பாலம் என்று எப்படி வைக்க முடியும்? - அமைச்சர் தங்கம்...

ஜி.டி.நாயுடு பாலம் என்பதை ஜி.டி. பாலம் என்று எப்படி வைக்க முடியும்? – அமைச்சர் தங்கம் தென்னரசு

-

- Advertisement -

ஜாதிப் பெயர்களை நீக்குவதை எடப்பாடி பழனிசாமி சிறுமைப்படுத்தி பேசுகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.ஜி.டி.நாயுடு பாலம் என்பதை ஜி.டி. பாலம் என்று எப்படி வைக்க முடியும்? - அமைச்சர் தங்கம் தென்னரசு
மேலும், இதுகுறித்து, ”இந்த பெயரைதான் வைக்க வேண்டுமென அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறிப்பிட்ட தலைவர்களின் பெயரைத்தான் வைப்பதாக எடப்பாடி சொல்வது தவறானது. கோவை உயா் மட்ட மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததை குறையாக சொல்வதா?. ஜி.டி.நாயுடு பாலம் என்று வைத்தால்தான் அவர் யார் என்பதை அறிய முடியும். ஜி.டி.நாயுடு பாலம் என்பதை ஜி.டி. பாலம் என்று எப்படி வைக்க முடியும். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சிலர் ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது” என அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

கரூர் சம்பவம் விபத்து மட்டுமே…சிபிஐ விசாரணை தேவையில்லை – புதிய நீதி கட்சி தலைவர் ஏ சி சண்முகம் பேட்டி

MUST READ