spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தவெக தலைவர் விஜய் வருகின்ற 17ஆம் தேதி கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்!

தவெக தலைவர் விஜய் வருகின்ற 17ஆம் தேதி கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்!

-

- Advertisement -

வேலுச்சாமி புரத்திற்கு அருகிலேயே உள்ள தனியார் மண்டபத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, பாதிக்கப்பட்டவர்களை  சந்தித்து பேசி நிவாரணம் வழங்க விஜய் திட்டமிட்டுள்ளாா் என தகவல் வெளியாகி உள்ளது.தவெக தலைவர் விஜய் வருகின்ற 17ஆம் தேதி கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்!

கரூரில், தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் சமீபத்தில் விஜய் வீடியோ கால் மூலமாக பேசியிருந்தார். வீடியோ கால் மூலமாக பேசி முடித்துள்ள நிலையில் நேரில் சந்திக்க திட்டமிட்டு வருகின்றனர்.

we-r-hiring

அதன்படி இதற்கு  முன்னதாக வருகின்ற 13-ஆம் தேதி கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து கட்சி சார்பில் அறிவித்துள்ள நிவாரண தொகையை வழங்கத் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்பொழுது தேதியில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்ற 17ஆம் தேதி விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலுச்சாமி புறத்திற்கு அருகிலேயே உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் மேலும் அதில் காயமடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதலை தெரிவிக்கும் விஜய் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையையும் வழங்குகிறார்.

விஜய் வருவதற்கு காவல்துறையிடம் பாதுகாப்பு வழங்க கோரி கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தமிழக வெற்றிக்கழகத்தினர் மனு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை!…5 கிராமசபைகளில் மக்களுடன் கலந்துரையாடிய முதல்வர்…

MUST READ