spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்காலை உணவுத் திட்டம் குறித்து பேசி அசத்திய அரக்கோணம் பள்ளி மாணவர்!

காலை உணவுத் திட்டம் குறித்து பேசி அசத்திய அரக்கோணம் பள்ளி மாணவர்!

-

- Advertisement -

தமிழ் நாட்டில் உள்ள 233 தொகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து முடித்த மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி! அரக்கோணம் பெருமூச்சி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி, ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். இப்பள்ளி ஆய்வின் போது தானாக முன்வந்து காலை உணவுத் திட்டம் குறித்து பேசி அசத்திய அரக்கோணம் பள்ளி மாணவர்காலை உணவுத் திட்டம் குறித்து பேசி அசத்திய அரக்கோணம் பள்ளி மாணவர்!
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் 233ஆவது ஆய்வை சட்டமன்ற உறுப்பினர் திரு.ரவி அவர்களின் அரக்கோணம் தொகுதியில் மேற்கொண்டார். அரக்கோணம் பெருமூச்சி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி, ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

இப்பள்ளி மாணவர்களின் திறமைகள் வியக்க வைப்பதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பள்ளியில் காலியாக உள்ள இடத்தை தூய்மை செய்து வைக்கும்படி அறிவுறுத்தினார். தூய்மை செய்தால் மாணவர்கள் விளையாடுவதற்கு உதவியாக இருக்குமென தெரிவித்தார். தொடர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து விரைவில் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.காலை உணவுத் திட்டம் குறித்து பேசி அசத்திய அரக்கோணம் பள்ளி மாணவர்!

we-r-hiring

இப்பள்ளி ஆய்வின் போது காலை உணவுத் திட்டம் குறித்து தானாக முன்வந்து பேசிய மாணவரையும், கலைத்திருவிழா போட்டிக்காக வேடமணிந்து திறமையை வெளிப்படுத்திய மாணவிக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். சிறப்புக் குழந்தை மாணவர் பரத்தின் ஓவியத் திறமையைக் கண்டு பாராட்டுகள் தெரிவித்தார்.

அரசுக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு உதவி மையம் – அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

MUST READ