ராமராதபுரத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, அ.தி.மு.க ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார்.எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய நாள் முதல் அ.தி.மு.க உறுப்பினராக இருந்தவர் அன்வர் ராஜா. 1986-ல் உள்ளாட்சி தேர்தலில் முதல் முதலில் போட்டியிட வாய்ப்பளித்தார் எம்.ஜி.ஆர் அப்போது ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார்.
மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் எம்.ஜி.ஆர் அன்வர் ராஜாவை அழைத்து பேசவைத்தார். அ.தி.மு.கவின் அதிகாரமிக்க குழுவான ஆட்சிமன்ற குழுவின் உறுப்பினராக எம்.ஜி.ஆர்ஆல் நியமிக்கப்பட்டவர். எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஜானகி அணியில் இருந்தார். அப்போது தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின் ஜெயலலிதா ஆதரவாளராக இணைந்தார். அன்வர் ராஜா 2001 – 2006 ல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்தவர், இடையில் நீக்கப்பட்டு மீண்டும் கட்சியில் இணைந்தார். 2014 இல் நாடாளுமன்ற உறுப்பினராக ராமநாதபுரம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2021 தேர்தலுக்கு முன் அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி குறித்து எதிராக பேசிவந்தார் – அப்போது அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 2021ல் இ.பி.எஸ்யை விமர்சித்தும், சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதாலும் கட்சியில் இருந்து 2021 நவம்பரில் நீக்கப்பட்டவர், 2023ல் ஆகஸ்ட்டில் மீண்டும் இணைந்தார்.
ஏற்கனவே பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்திருந்த போதும் அக்கட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்தார். சிஏஏ சட்டத் திருத்தத்துக்கு அ.தி.மு.க ஆதரவு அளித்தபோதும் நாடாளுமன்றத்தில் எதிர்த்து பேசினாா். பா.ஜ.க உடன் கூட்டணி வைத்ததால் அதிருப்பதியடைந்த அன்வர் ராஜா, தமிழ்நாட்டில் ஒருபோதும் பா.ஜ.க கால் ஊன்ற முடியாது என்று அண்மையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தாா்.
அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா அதிமுகவில் இஸ்லாமிய முகமாக இருந்தவர், தற்போது அ.தி.மு.கவில் இருந்து விலகி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தி.மு.கவில் இணைந்து அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இறுதிக்கட்ட ஆய்வு பணிகள்-விரைந்து முடிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தல்…