spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்திமுக கூட்டணியில் எல்லாம் நேர்மையாகவே நடைபெறுகிறது – அமைச்சர் கே.என்.நேரு பதிலடி

திமுக கூட்டணியில் எல்லாம் நேர்மையாகவே நடைபெறுகிறது – அமைச்சர் கே.என்.நேரு பதிலடி

-

- Advertisement -

திமுக கூட்டணி சரியாகவும் நேர்மையாகவும் உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி தந்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, பழனிச்சாமி தான் அவமானப்பட்டு நிற்கிறார் என சாடியுள்ளார்.திமுக கூட்டணியில் எல்லாம் நேர்மையாகவே நடைபெறுகிறது – அமைச்சர் கே.என்.நேரு பதிலடிசென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் 164.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, “தி.நகர் மேம்பால பணிகள் செப்டம்பர் மாதம் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு  திறக்கப்படும் என்றார். அப்போதே செண்ட்ரலில் உள்ள விக்டோரிரா ஹாலும் புனரமைக்கப்பட்டு திறக்கப்படுவதாக கூறிய அவர்,

செப்டம்பரிலேயே ஆர்.கே.நகர் மேம்பாலமும் அதற்கு அடுத்த மாதம் கணேசபுரம் மேம்பாலமும் திறக்கப்படும் என தெரிவித்தார். போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில், வேலைகள் சற்று தாமதமாக நடைபெறும் சூழல் உள்ளதை அமைச்சர் நேரு குறிப்பிட்டார்”.

we-r-hiring

சென்னையில் கட்டப்படவுள்ள புதிய பாலங்களின் பணிகள் குறித்தான கேள்விக்கு, “வேளச்சேரியில் புது பாலம் அமைப்பதற்கான பணிக்குரிய டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் வள்ளுவர் கோட்டத்திற்கு முன்பு, 175 கோடி ரூபாயில் புதிய மேம்பாலம் கட்டுவதற்காக, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மழைக்காலத்துக்கு முன்பாக மழை நீர் வடிகால் பணிகளை முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியிருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளாா். மேலும், மழை வந்தாலும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து பணிகளும் நடைபெற்ற வருகிறது”என அவர் கூறினார்.

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பில் 200 கோடி ரூபாய் இழப்பீடு என்ற புகார் குறித்தான கேள்விக்கு பதிலளித்த கே.என்.நேரு,”அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தவறு இருந்தால்  நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் உத்தரவாதம் அளித்தார்.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்தது பற்றி கேள்வி எழுப்பிய போது,”பாலத்தை பற்றி கேட்கும் போது, அரசியல் கேள்வி எதற்கு? என, சிரித்தவாறே வினவிய நேரு, திமுக கூட்டணியில் உள்ளவர்கள் யாரும் அவமானப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தான் அவமானப்பட்டு நிற்கிறார்” என்றும் பதில் அளித்தார்.

கூட்டணி ஆட்சி உண்டு என ஒரு தரப்பும் கூட்டணி ஆட்சி இல்லை என மற்றொரு தரப்பும் மாறி மாறி அடித்துக் கொள்வதாக அவர் விமர்சித்தார்.திமுக கூட்டணியில் எல்லாம் சரியாகவும் நேர்மையாகவும் உள்ளது ”என அமைச்சர் கே.என்.நேரு உறுதிபடத் தெரிவித்தார்.

நிதிப் பற்றாக்குறை என்ற பழைய பல்லவியையே பாடும் திமுக அரசு – அன்புமணி விமர்சனம்

MUST READ