தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளதாக தவெக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளாா்.நடிகா் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினாா். ஆகஸ்ட் மாதம் அக்கட்சிக்கான கொடியும் பாடலும் அறிவிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் வெளியானது. விழுப்புரம் மாவட்ட காவல் துறையினா் இம்முதல் மாநாட்டிற்கு 21 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த நிலையில், மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அதற்குள் செய்ய முடியாது என்பதால் மாநாடு தள்ளிப் போனது. இக்கட்சியின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாநில மாநாடு மதுரை பாரப்பத்தியில் வருகிற ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவா் விஜய் அறிவித்துள்ளாா். இம்மாநாட்டிற்கான கால் கோள் விழா மதுரை பாரப்பத்தியில் இன்று காலை 5.25 மணிக்கு யாகபூஜையுடன் துவங்கியது. விழாவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக கும்பங்கள் பூஜைக்கு தயார் செய்யப்பட்டு மதுரை பாண்டி முனீஸ்வரர் முதல் மடப்புரம் காளி சமயபுரம் மாரியம்மன் திருப்பரங்குன்றம் முருகன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தாலும் ஹைலைட்டாக எம்மதமும் சம்மதம் என்று குறிக்கும் வகையில் நடுவில் விநாயகர் மற்றும் வேளாங்கண்ணி மாதா குழந்தையுடன் மெக்கா படம் நடுவில் இடம் பெற்றது. காலை 4 மணிக்கு கால் கோல் விழா என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சாலை 5.10 மணிக்கு வருகை தந்தார். அதன் பின் யாக பூஜைகள் நடைபெற்றது. மாநாட்டிற்கு 15 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என்று எதிா்பாா்க்கப்படுகின்ற நிலையில், அவர்கள் பாதுகாப்பாக வந்து பாதுகாப்புடன் செல்லவே இந்த யாக பூஜைகள் நடைபெற்றது.
