Homeசெய்திகள்அரசியல்ஈரோடு இடைத்தேர்தல்- பின்வாங்கியது பாஜக?

ஈரோடு இடைத்தேர்தல்- பின்வாங்கியது பாஜக?

-

- Advertisement -

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து பாஜக பின்வாங்குகிறது.

annamalai

we-r-hiring

பாஜக வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்தார். கூட்டணியில் அதிமுகவே பெரிய கட்சி என்றும், இடைத்தேர்தலில் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

இதன்மூலம் அதிமுக வேட்பாளரை ஆதரிக்க பாஜக முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா போட்டியிடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுகவே போட்டியிடும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அறித்துள்ளார். ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தி எடப்பாடி பழனிசாமி தரப்பு அந்த தொகுதியை எடுத்துக்கொண்டது. இதையடுத்து இடைத்தேர்தலில் ஆதரவுக் கோரி பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆதரவு திரட்டிவருகின்றனர். ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக பாஜக எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில், வேட்பாளர் தேர்வில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரம் காட்டுகிறது. முன்னதாக அதிமுகவில் இடைத்தேர்தலுக்கான விருப்பமனு இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்த பாஜக, கட்சியின் பலத்தை சோதிக்கும் வகையில் தனித்து களம் இறங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, இந்நிலையில் அதற்போது எடப்பாடி பழனிசாமியின் அதிரடிக்கு அண்ணாமலை பணிந்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், தேர்தல் பணிகளை பிரதான அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன.

MUST READ