பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவர் தகுந்த அறிவுரை வழங்கிட வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அந்த கடிதத்தில் கோரி இருக்கிறார்.
இந்தியாவில் மக்களாட்சி இன்றைக்கு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. நம் நாட்டில் கூட்டாட்சி தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்து மத்திய மாநில அரசுகளின் கடமைகளையும் பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்கப்பட்டு இருக்கும். அதிலும் அவை இப்போது மதிக்கப்படுவது பின்பற்றப்படுவது இல்லை . அதனால் மாநில அரசுகளின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு இருக்கும் முதல்வர், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாநில ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால் அந்தந்த மாநில நிர்வாக செயல்பாடுகள் அந்த குறிப்பிட்ட இடங்களில் முடங்கிப் போய் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அந்தந்த மாநிலத்தின் சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுப்பு நிர்ணயம் செய்ய வேண்டும். இதை மத்திய அரசு குடியரசுத் தலைவர் வலியுறுத்தி மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது ஏற்புடையதாக இருக்கும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஏப்ரல் பத்தாம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தனி தீர்மானத்தின் சாராம்சத்தின் கடிதத்துடன் இணைத்து அனுப்பி இருப்பதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் நோக்கம் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்று தான் நம்புவதாக கூறியிருக்கிறார்.