Homeசெய்திகள்அரசியல்புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னிலை

புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னிலை

-

- Advertisement -

புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னிலை

புதுச்சேரியில் வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 10,321 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னிலை

புதுச்சேரியில் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு புதுச்சேரி லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பெண்கள் பொறியியல் கல்லூரி ஆகிய இரண்டு மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. இதேபோன்று காரைக்கால், மாகே, ஏனாம், என தலா ஒரு மையங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி முதல் சுற்று வாக்கு நிலவரப்படி 12 தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டு இரண்டாவது சுற்று நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னிலை

இதில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 63,992 வாக்குகளும், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் 53,671 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் 10,321 வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை வகித்து வருகிறார்.

MUST READ