தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வக்ஃபு திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்யும் என்று அறிவித்துள்ளார். இந்தப் போரில் தமிழ்நாடு போராடி வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறினார்.
மார்ச் 27 அன்று தமிழ்நாடு சட்டமன்றம் வக்ஃப் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதை அவர் நினைவுபடுத்தினார். இது மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகவும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில், வக்ஃப் மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முதல் மனுவை காங்கிரஸ் எம்பி முகமது ஜாவேத் தாக்கல் செய்தார். வக்ஃபு திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும், மசோதா மீதான அரசியல் கொந்தளிப்பு அடங்கவில்லை. இதனால்தான் எதிர்கட்சிகள் நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி ”இந்த மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதை மட்டுமே நாங்கள் செய்வோம்” என்று அவர் கூறினார்.
வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது முஸ்லிம் சமூகத்திற்கு பாகுபாடு காட்டுவதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். வக்ஃப் திருத்த மசோதா மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் அங்கீகரிக்கப்பட்டு, இப்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யின் மனுவுக்குப் பிறகு, அது சட்டப் போராட்டத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
வக்ஃப் திருத்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கலாம். ஆனால், அதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இது இன்னும் ஜனாதிபதியால் கையெழுத்திடப்படவில்லை. ஆகையால், சட்டப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதை மட்டுமே நாங்கள் செய்வோம்.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திருத்த மசோதா அரசியலமைப்புக்கு விரோதமானது என்று மாநிலங்களவை எம்.பி. பிரமோத் திவாரி தெரிவித்தார்.