Homeசெய்திகள்அரசியல்ரிப்போர்ட்டர்களை கண்டால் ஓட்டம் பிடிக்கும் காங்கிரஸ் எம்.பி - மீண்டும் போட்டியிட்டால் சொந்த கட்சி காரர்களே...

ரிப்போர்ட்டர்களை கண்டால் ஓட்டம் பிடிக்கும் காங்கிரஸ் எம்.பி – மீண்டும் போட்டியிட்டால் சொந்த கட்சி காரர்களே தோற்கடிக்க வியூகம்

-

ரிப்போர்ட்டர்களை கண்டால் ஓட்டம் பிடிக்கும் காங்கிரஸ் எம்.பி

ரிப்போர்ட்டர்களை கண்டால் ஓட்டம் பிடிக்கும் காங்கிரஸ் எம்.பி

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஜெயக்குமார், தற்போது தேர்தல் வரும் நேரத்தில் மீண்டும் தொகுதி பக்கம் தலைகாட்ட தொடங்கியுள்ளார் என்று திமுக கூட்டணி கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

கடந்த 2019 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக டாக்டர். ஜெயக்குமார் போட்டியிட்டார். தொகுதிக்கு அறிமுகம் இல்லாத நபராக இருந்தாலும் காங்கிரஸ் மேலிடத்தில் செல்வாக்கு உள்ளவர் என்றும் குறிப்பாக ராகுல்காந்திக்கு நெருக்கமானவர் என்பதாலும் அவரை திமுகவினர் ஊர் ஊராக அழைத்து சென்று மக்களிடம் அறிமுகப்படுத்தினார்கள்.

அதிமுக வேட்பாளர் வேணுகோபாலை

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு புதுமுகமாக வந்த ஜெயக்குமார் பெரிதாக பணம் செலவழிக்காமல் அதிமுக வேட்பாளர் வேணுகோபாலை விட சுமார் 3,56,955 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முழுக்க முழுக்க திமுகவின் செல்வாக்கில் வெற்றி பெற்ற ஜெயக்குமார், தேர்தலில் வெற்றி பெற்றதும் மக்கள் என்னை நம்பி தான் வாக்களித்தார்கள், எனக்காக மட்டுமே வாக்களித்தார்கள் என்று குரலை மாற்றி ஆனவமாகப் பேசத் தொடங்கினார்.

இந்த மாவட்டத்தில், தான் மட்டுமே படித்தவர் என்றும், தான் மட்டுமே நேர்மையானவர் என்றும் மேதாவி தன்மையுடன் நடந்து கொண்ட ஜெயக்குமார் . கூட்டணி கட்சிகாரர்களையும், சொந்த கட்சிகாரர்களையும், தொகுதி மக்களையும் சிறிதும் மதிக்காமல் நடந்துக் கொண்டதாக காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள்

திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக ஜெயக்குமார் வெற்றி பெற்றதில் இருந்து காங்கிரஸ் கட்சியை முழுக்க முழுக்க தலித் இயக்கமாகவே மாற்றிவிட்டார் என்றும் கட்சியின் மாவட்ட பொறுப்புகளுக்கு, மாநகர நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் பெரும்பாலும் தலித் பிரமுகர்களையே நியமனம் செய்துள்ளதாகவும் அக்கட்சியினர் குமுறுகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் என வேறு எவருக்கும் காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்று நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயகுமார் வெற்றி பெற்றதில் இருந்து தொகுதி பக்கமே எட்டிப்பார்க்க வில்லை என்று மக்கள் பரவலாக விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த ஐந்தாண்டுகளில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் ஒரேயொரு நிழற்குடையை மட்டும் திறந்ததை தவிர வேறு எதுவும் அவர் செய்யவில்லை என்று கூறுகின்றனர்.

இதுகுறித்து கேள்வி எழுப்ப ரிப்போர்ட்டர்கள் மைக்கை நீட்டினால் அலட்சியமாக தட்டிவிட்டு ஓடிவிடுகிறார். இந்த நிலையில் திருவள்ளூர் தொகுதியில் மீண்டும் அவருக்கே சீட் ஒதுக்கினால் காங்கிரஸ் கட்சியினரே அவருக்கு எதிராக வேலை செய்து தோற்கடிக்கப்போவதாக பேசி வருகின்றனர்.

MUST READ